வேகமாகப் பரவும் 'ஆட்கொல்லி' எபோலா: லைபீரியாவில் அவசரநிலை பிரகடனம்
மான்ரோவியா: எபோலோ வைரஸ் வேகமாக பரவி வருவதால் மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் ஆட்கொல்லியான எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் தாக்கி சியர்ரா லியோன், லைபீரியா, கினியா, நைஜீரியாவில் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் எபோலா வைரஸ் வேகமாக பரவுவதால் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீஃப்.
இது குறித்து அவர் புதன்கிழமை இரவு கூறுகையில்,
அவசர நிலை குறைந்தது 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். எபோலாவின் அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே போகிறது. அறியாமை, வறுமை, கலாச்சார பழக்கவழக்கங்கள் ஆகியவை வைரஸ் பரவுவதை மேலும் மோசமாக்கியுள்ளன என்றார்.
முன்னதாக எபோலா வைரஸ் பரவுவதை தடுக்குமாறு கடவுளை வேண்டிக் கொண்டு 3 நாட்கள் விரதம் இருந்து பிரார்த்தனை செய்யுமாறு எல்லன் மக்களை கேட்டுக் கொண்டார். லைபீரியாவில் மட்டும் 300 பேர் எபோலா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications