ஹாலிவுட் படமே தோத்துபோச்சு.. இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தில் பரபர சேஸிங்-துப்பாக்கிச்சூடு.. ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ளிட்டவர்கள் ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்து பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஹாலிவுட் படத்தை தோற்கடிக்கும் வகையில் பைக், கார் சேஸிங் செய்து ஆயுதம் ஏந்திய கும்பலை இஸ்ரேல் போலீசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காசா உள்ளது. இதற்கு முன்பு இஸ்ரேல் வசம் இந்த பகுதி இருந்தது. அதன்பிறகு ஏற்பட்ட சுமூக ஒப்பந்தத்தை தொடர்ந்து காசா பகுதியை இஸ்ரேலிடம் பாலஸ்தீனம் ஒப்படைத்து விட்டு சென்றது. அதன்பிறகு ஹமாஸ் எனும் அமைப்பு காசாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

Like Hollwood movie, Israel cops fires at armed men in chase on bike

இதையடுத்து இஸ்ரேலை காசா பகுதிக்குள் நுழைய ஹமாஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இது இருதரப்புக்கும் மோதலை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் காசாவை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அதோடு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இருதரப்புக்கும் இடையேயான மோதல் போராக உருவாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது வெறும் 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

Like Hollwood movie, Israel cops fires at armed men in chase on bike

மேலும் ஹமாஸ் தீவிரவாதிகள் பாரசூட் மற்றும் கார்களில் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் சாலைகளில் கார்கள், ஜீப்பில் செல்வதோடு துப்பாக்கிகளுடன் நுழைந்து மக்களை சரமாரியாக சுட்டு கொன்று வருகின்றனர். தற்போது வரை இருதரப்பையும் சேர்த்த ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில் ஒரு காரில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் தீவிரவாதிகள் செல்ல அதனை மற்றொரு கார் மற்றும் மோட்டார் சைக்களில் இஸ்ரேல் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் விரட்டி சென்று துப்பாக்கியால் தொடர்ந்து சுடுகின்றனர். குண்டுகள் அந்த ஹமாஸ் தீவிரவாதிகள் சென்ற காரை துளைக்கின்றன.

இதனால் அடுத்து சிறிது நேரத்தில் கார் சாலையோரம் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் மற்றும் போலீசார் உடனடியாக தங்களின் வாகனத்தில் இருந்து இறங்கி அந்த காரை சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுடவே கார் கண்ணாடிகள் சல்லி சல்லியாக உடைந்து நொறுங்குகின்றன. மேலும் காரில் இருந்த 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் காசா அருகே உள்ள நெட்வியாட் புறநகர் பகுதியில் நடந்துள்ளது. இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா இடையேயான எல்லைப்பகுதியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+