குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டதா? ஈரான் அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெக்ரான்: இன்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைகள் அணிவகுத்தன. இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலின் அத்துமீறலுக்கு தகுந்த பதிலடியை கொடுப்போம் எனவும் ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடக்கிறது. இதில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படும் அனைத்து தரப்பினர் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், இப்போது ஈரான் மீதும் அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது.

israel iran israel iran war

இஸ்ரேலுக்கம் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டிற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரானிய ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மூலம் கொன்று குவித்துள்ளது.

இதனால் கோபம் அடைந்த ஈரான் கடந்த 1ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 185 ஏவுகணைகளை ஈரான் தனது நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றம் அதனை சுற்றிய இடங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால், கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், உடனடியாக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

ஆனாலும் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலால் என்ற பேச்சு அடிபபட்டது. இதனால் மேற்கு ஆசியாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவியது. இத்தகைய பதற்றத்திற்கு இடையே, ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலையில் வான்வெளி தாக்குதலை நடத்தியது. ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைகள் அணிவகுத்தன. ஈரானின் ராணுவ உற்பத்தி மையங்களை குறிவைத்து இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது.

சில மணி நேரம் நீடித்த தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக் கொண்டது. இதனிடையே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகள் கூறுகையில், இஸ்ரேல் இன்று காலை நடத்திய வான்வெளி தாக்குதலில் குறைந்த அளவு சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இஸ்ரேல் ஏவுகணைகளை முறியடித்துள்ளது" என்று தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்ரேலின் அத்துமீறலுக்கு தகுந்த பதிலடியை கொடுப்போம் எனவும் ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+