கார் கண்ணாடியைத் திறந்து வைத்து வேடிக்கை பார்த்த பெண்.. சிங்கம் அடித்ததில் பலியானார்!
ஜோகன்னஸ்பர்க்: ஆப்பிரிக்க நகரான ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள பிரபலமான லயன் பார்க்கில் அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை சிங்கம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
அவர் கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஜோகன்னஸ்பர்க்குக்கு 30 கிலோ மீட்டர் வடக்கே இருக்கும் லயன் பார்க்கில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த பார்க்கிற்குள் செல்பவர்கள் கார் கண்ணாடியை மூடியே வைத்திருக்க வேண்டும் திறந்து வைத்திருக்க கூடாது என்று கடும் விதி இருக்கிறது.

இருந்தும் இவர்கள் பயணம் செய்தபோது கார் கண்ணாடியை இறக்கி வைத்துக்கொண்டு சிங்கங்களை பார்த்து ரசித்தபடி இருந்திருக்கிறார்கள்.
திடீரென்று ஒரு சிங்கம் இவர்கள் கார் கதவுக்கு ஊடே கால்களை விட்டு தாக்கியிருக்கிறது. அதில் பலத்த காயமடைந்த பெண் பயணி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரை காப்பாற்ற முயன்ற கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பார்க்கை சுற்றிப்பார்க்கும் போது கண்ணாடி கண்டிப்பாக மூடியிருக்க வேண்டும் என்று கடுமையான விதி இருந்தும் சிலர் ஆர்வமிகுதியால் கண்ணாடியை இறக்கி விட்டு ரசிப்பதால் இந்த மாதிரி அசம்பாவிதம் ஏற்பட்டு விடுவதாக அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த நான்கு மாதங்களில் நடந்த மூன்றாவது சம்பவம் இது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications