தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள்.. அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது இதுவரை 13 பேர் அதிகாரப்பூர்வமாக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது இதுவரை 13 பேர் அதிகாரப்பூர்வமாக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த 13 பேரும் அதிபர் மீது வழக்கு தொடுத்து இருக்கின்றனர்.

இந்த 13 பேர் இல்லாமல் இன்னும் 4 பேர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் இன்னும் டிரம்ப் மீது வழக்கு தொடுக்கவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் பலரும் டிரம்ப்பின் இந்த மோசமான செயலுக்கு எதிராக பேசியுள்ளனர்.

இந்த 13 பேரும் தற்போது தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இதில் சிலர் மாடலிங் துறையிலும் சினிமா துறையிலும் உள்ளவர்கள் ஆவர்.

கிறிஸ்டின் ஆண்டர்சன் குற்றச்சாட்டு

கிறிஸ்டின் ஆண்டர்சன் குற்றச்சாட்டு

அமெரிக்காவை அதிகம் உலுக்கிய குற்றச்சாட்டு இதுதான். கிறிஸ்டின் ஆண்டர்சன் என்ற பெண் மேன்ஹாட்டன் பகுதியில் இருக்கும் போது 1990 களில் டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கிறிஸ்டின் ஆண்டர்சன் கூறியுள்ளார். இதற்கு போட்டோ ஆதாரங்களும், நேரடி சாட்சியங்களும் இருக்கிறது. மேலும் அதே வருடம் ஜில் ஹார்த் என்ற பெண்ணிடம் இவர் மோசமாக நடந்துள்ளார். ஒரு பிசினில் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மிண்டியின் வாக்குமூலம்

மிண்டியின் வாக்குமூலம்

2003ம் ஆண்டு மிண்டி மேக் கில்வாரி என்ற பெண் இதேபோல் அமெரிக்க அதிபர் டிரப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த டிரம்ப் அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். தற்போது மிண்டி இதுகுறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். அதேபோல் சில வருடங்களுக்கு பின் 2007ல் டிரம்ப் 'சேர்வோஸ்' என்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். டிரம்ப் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜெசிக்கா லீட்ஸ் குற்றச்சாட்டு

ஜெசிக்கா லீட்ஸ் குற்றச்சாட்டு

தற்போது சமீபமாக 2016ல் வந்த குற்றச்ச்சாட்டு தான் அமெரிக்காவை கதிகலங்க வைத்தது. ஜெசிக்கா லீட்ஸ் என்ற பெண்மணி விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது அதே விமானத்தில் டிரம்ப்பும் வந்து இருக்கிறார். பின் சீட்டில் இருந்த டிரம்ப் மிகவும் மோசமாக கைகளை வைத்து அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து இருக்கிறார். டிரம்ப் குறித்து ஜெசிக்கா லீட்ஸ் கூறும் போது ''அவர் ஒரு ஆக்டோபாஸ் போன்ற உயிரினம்'' என்று பேசியுள்ளார்.

இன்னும் சில குற்றங்கள்

இன்னும் சில குற்றங்கள்

இந்த நிலையில் போல் இன்னும் 8 பேர் அதிபர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்படி டாக்கர்ட் மேக்தோவல், கரீனா வெர்ஜினா, ஜெனிபர் மர்பி, நின்னி லெக் சோனான், ஜெசிக்கா தேரேக் ஆகியோரும் இதுகுறித்து வாக்குமூலம் அளித்து உள்ளனர். மேலும் இது இல்லாமல் பலர் டிரம்ப் மீது சமூக வலைத்தளங்களில் புகார் அளித்து இருக்கின்றனர். தற்போது இதன் காரணமாக இவருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் அதிக பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒரே அதிபர் இவர்தான் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+