10 கிமீ போக இவ்வளவு நேரம் ஆகுமா? உலகிலேயே டிராபிக் அதிகமுள்ள சிட்டி! இந்திய நகரங்கள் எவை எவை? லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆம்ஸ்டெர்டாம் நகரை சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் உலக அளவில் போக்குவரத்து அதிகம் உள்ள நகரங்களின் டாப் டென் லிஸ்டை ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் 2 நகரங்கள் டாப் டென் லிஸ்டில் இடம்பெற்று உள்ளது. அவை எவை என்று இங்கே பார்க்கலாம்.

உலக அளவில் தற்போது மக்களிடையே வாகன பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலான நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு இல்லை. சென்னை, பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

List of most Traffic Congestion cities in the world: London top in the list Bangalore in 6 th position

அதேபோல், உலக அளவில் பார்த்தோம் என்றால் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். பீக் நேரங்களில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்கின்றன. இத்தகைய சூழலில் தான், உலக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்கள் குறித்து ஆம்ஸ்டெர்டாம் நகரை சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

லண்டம் முதல் இடம்: 6 கண்டங்களில் உள்ள 55 நாடுகளை சேர்ந்த 387 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பயண நேரம், எரிபொருள் கட்டணம், CO2 வெளியெற்றம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் தொடர்பாக நடைபெற்ற அந்த ஆய்வு முடிவுகளை நிறுவனம் வெளியிட்டது. இதில் உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரமாக இருந்த லண்டன் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் 2 நகரங்கள்: பரபரப்பு மிக்க பீக் நேரத்தில் மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ஊர்ந்து செல்கிறதாம். 2023 ஆம் ஆண்டில் மோசமான டிராபிக் உள்ள நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் இரு நகரங்கள் உள்ளன. அதாவது பெங்களூர் 6 வது இடத்திலும் புனே 7 வது இடத்திலும் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் உலக அளவில் 2 வது இடத்தில் பெங்களூர் இருந்தது. தற்போது பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்றுள்ளது.

2 வது இடத்தில் பெங்களுர்: 2022 ஆம் ஆண்டில் பெங்களூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சமயத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு 29 நிமிடங்கள் 10 நொடிகளாக பதிவானது. 2023 ஆம் ஆண்டில் போக்குவரத்து நெரிசலின்போது 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது ஆய்வில் தெரிந்துள்ளது. இந்தியாவின் ஐடி தலைநகரமான பெங்களூர் நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் அயர்லாந்து தலைநகர் டப்ளினுக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+