ஜக்கர்பர்க் தனது மனைவியை முதன்முதலில் எங்கு சந்தித்தார் என்று தெரியுமா?
நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் பற்றி அவ்வளவாக தெரியாத விஷயங்களை பார்ப்போம்.
இளம் வயதில் கோடீஸ்வரனான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் புதன்கிழமை தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.
ஜக்கர்பர்க் பற்றி பலருக்கு தெரியாத விஷயங்களை பார்ப்போம்.

நீலம்
ஜக்கர்பர்குக்கு சிவப்பு-பச்சை நிறத்தை கண்டுபிடிக்க முடியாத குறைபாடு உள்ளது. அவருக்கு நீல நிறத்தை தான் நன்றாக பார்க்க முடியும். அதனால் தான் அவர் ஃபேஸ்புக்கை நீல நிறத்தில் வைத்துள்ளார்.

மைக்ரோசாப்ட்
உயர்நிலைப் பள்ளியில் படிக்கையில் ஜக்கர்பர்க் இசை அப்ளிகேஷனான சினாப்ஸ் மீடியா பிளேயரை வேறு ஒருவருடன் சேர்ந்து உருவாக்கினார். அந்த அப்ளிகேஷனை மேலும் மெருக்கேற்றக் கோரி மைக்ரோசாப்ட் மற்றும் ஏஓஎல் ஆகிய நிறுவனங்கள் அவருக்கு வேலை கொடுக்க முன் வந்தன. ஆனால் அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க சென்றுவிட்டார்.

டி.வி.
யூத பெற்றோருக்கு பிறந்த ஜக்கர்பர்க்குக்கு மத நம்பிக்கை இல்லை. அவருக்கு சொந்தமாக ஒரு டிவி கூட இல்லை.

மோசமான உடை
ஜக்கர்பர்க் எப்பொழுதும் ஜீன்ஸ், டி சர்ட்டில் தான் இருப்பார். இந்நிலையில் அவர் மோசமாக உடை அணியும் பிரபலம் என்ற பெயரை எடுத்துள்ளார்.

பாத்ரூம்
மார்க் ஜக்கர்பர்க் தனது காதலியான பிரஸில்லா சானை 2012ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி திருமணம் செய்தார். பார்ட்டி ஒன்றில் பாத்ரூம் போக வரிசையில் நின்றபோது தான் ஜக்கர்பர்கும், சானும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர்.

23
23வது வயதில் உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக ஆனார் மார்க் ஜக்கர்பர்க்.

1 டாலர்
ஜக்கர்பர்க் வருடாந்திர ஊதியமாக வீட்டுக்கு வெறும் ஒரு அமெரிக்க டாலரை எடுத்துச் செல்கிறார். கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோரின் வருடாந்திர சம்பளமும் வெறும் ஒரு டாலரே.

பீஸ்ட்
ஜக்கர்பர்க் ஹங்கேரியைச் சேர்ந்த ஷீப்டாக் வகையைச் சார்ந்த நாய் ஒன்றை வளர்க்கிறார். பீஸ்ட்(மிருகம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நாய்க்கு ஃபேஸ்புக்கில் கணக்கு உள்ளது. அதன் பக்கத்தை 18 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications