புற்றுநோயால் பாதிக்கப்பட்ட' ஸ்டார் வார்ஸ்' ரசிகனின் கடைசி ஆசை.. நிறைவற்ற ரசிகர்கள் கோரிக்கை
நியூயார்க்: ஸ்டார் வார்ஸ் படத்தின் தீவிர ரசிகர் ஒருவர் புற்றுநோயால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் அடுத்த மாதம் வெளியாகப் போகும் படத்தை பார்த்து விட்டுத்தான் எனது உயிர் பிரியும் என்று அவர் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் டேனியல் ஃப்லீட்வுட்(32). புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இவர் டிசம்பர் மாதம் வெளிவர இருக்கும் ஸ்டார் வார்ஸின் ‘த போர்ஸ் அவேக்கன்ஸ்' படத்தை பார்த்தால்தான் தனது உயிர் நிம்மதியாக பிரியும் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனது எட்டாவது வயதிலேயே ஸ்டார் வார்ஸ் படங்களின் தீவிர ரசிகனாகிவிட்ட டேனியல், ஒரு ரசிகனாக இந்தத் திரைப்படத்தை ஒட்டிய கற்பனை கதாபாத்திரங்களை கொண்ட சில கதைகளையும் எழுதி, உள்ளூர் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார்.
தற்போது, 'ஸ்பின்டில் செல் சர்கோமா' எனும் அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள டேனியல் மேற்கொண்டு இரண்டு மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கடந்த ஜூலை மாதமே கூறிவிட்டனர்.
இந்நிலையில், டிசம்பர் மாதம் 18-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டார் வார்ஸின் அடுத்த பாகத்தை முன்கூட்டியே பார்க்க டேனியலுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று அவரது நண்பர்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக குரல்கொடுத்து வருகின்றனர்.
ஸ்டார் வார்ஸ் திரைப்பட இயக்குனர் ஜே.ஜே.ஆப்ரஹாம்ஸ் கடந்த 2012-ம் ஆண்டு இதேபோல நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் நோக்கில் முன்கூட்டியே படத்தை திரையிட்டு காண்பித்தார். படத்தைப் பார்த்த சில தினங்களிலேயே ரசிகரின் உயிரும் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவரது மனைவி ஆஷ்லே கூறுகையில், தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலும், டேனியலின் இறுதி ஆசையான ஸ்டார் வார்ஸ் படத்தை பார்த்துவிட வேண்டும் எனும் மன உறுதியை நான் பாராட்டுகிறேன். புற்றுநோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இறுதி மூச்சினை ஸ்டார் வார்ஸ் பார்ப்பதற்கெனவே பிடித்து வைத்திருக்கிறார். அவரது ஆசையை ஏற்று படக்குழுவினர் அவருக்கு உதவி செய்ய வேண்டும்,என்றார்.
இது உலகெங்கிலும் உள்ள ஸ்டார் வார்ஸ் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications