கழிவறை பேப்பரில் கல்யாண கவுன் – அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் சாதனை!
நியூயார்க்: கல்யாணத்தை செய்து பார்..வீட்டைக் கட்டிப்பார் என்பதெல்லாம் அந்தக்காலம்.
இந்தக்காலத்தில் கழிவறை பேப்பரை வைத்தே கல்யாணத்தை முடித்து விடுவோம் என்று காட்டி உள்ளனர் அமெரிக்காவில்.
கல்யாணத்திற்கு 6 முழப் பட்டுப்புடைவையெல்லாம் தேவை இல்லை.நான்கே நான்கு ரோல் கழிவறை பேப்பர் போதும் என்று அமெரிக்க ரியாலிட்டி ஷோ ஒன்று நிரூபித்துள்ளது.

இறுதிச் சுற்று:
சுமார் 1500 பேர் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்று கடந்த வியாழக்கிழமை நடந்த போது 10 பேர் மட்டுமே போட்டியாளர்களாக இருந்தனர்.

முதல் பரிசு 10 ஆயிரம் டாலர்:
20 ரோல் டாய்லட் பேப்பரில், பூ வேலைப்பாடு நிறைந்த கண்ணைக் கவரும் திருமண கவுனை வடிவமைத்திருந்த மிச்சிகன் நகரை சேர்ந்த சூசன் ப்ரென்னான் என்பவர் முதல் பரிசுத் தொகையான 10 ஆயிரம் டாலர்களை தட்டிச் சென்றார்.

திருமண கவுன் வடிவமைப்பு:
திருமண கவுன் மட்டுமின்றி, மணமகள் ஏந்திச் செல்லும் கூடை, கைப்பை ஆகியவற்றையும் அவர் டாய்லெட் பேப்பரில் வெகு நேர்த்தியாக உருவாக்கியிருந்தார்.

ஒரு மாத உழைப்பு:
நூல், பசை மற்றும் செலோ டேப் ஆகியவற்றை கொண்டு இந்த கவுனை உருவாக்க ஒரு மாதம் தொடர்ந்து உழைத்ததாக சூசன் தெரிவித்தார்.இந்த போட்டியில் இவர் மூன்றாவது முறையாக முதல் பரிசை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications