லண்டனில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்: 1 பெண் பலி; 6 பேர் காயம்
லண்டன்: லண்டனில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்குயதில் பெண் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய லண்டனின் ரசல் சதுக்க பகுதியில், நேற்றிரவு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அடையாள தெரியாத நபர் ஒருவர் திடீரென அருகில் உள்ளவர்களை கத்தியால் குத்தினார். இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் ஆவேசமாக குத்தியதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கூக்குரல் எழுப்பினர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார் உடனே அந்த இடத்துக்கு வந்தனர். கத்தியால் தாக்கிய நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நீஸ் நகரில் குவிந்திருந்த மக்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பிய லாரியின் மூலம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவன், ஏராளமானோரை கொன்றான். இதனையடுத்து லண்டனின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மர்மநபர் கத்தி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என லண்டன் போலீசார் கருதுகின்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications