லண்டனில் பொங்கல் விழா: 'மதுரை குலுங்க குலுங்க' கிராமிய நடனம் ஆடிய பெண்கள்
லண்டன்: லண்டன் தமிழ்ச் சங்கம் தமிழ் கலாச்சாரத்தை பாரெங்கும் பரப்ப வேண்டும் என்ற உயரிய நோக்கோடு "பொங்கல் விழா"வை லண்டன் நியூ ஹாம் டவுன் ஹாலில் கடந்த மாதம் 25ம் தேதி விமரிசையாக கொண்டாடியது.
தமிழ் பள்ளி மாணக்கர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி விழாவை துவக்கி வைத்தனர். தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த இளையோர்கள் மற்றும் முதியோர்களால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து நாதஸ்வர கச்சேரி சிறப்பாக நடைபெற்றது. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டனை சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் லண்டன் தமிழ் சங்க நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப் பட்டது. லண்டன் ஶ்ரீமுருகன் கோவில் தலைமை குருக்கள் விழாவில் கலந்து கொண்டு லண்டன் தமிழ் சங்கம் கடந்த பல வருடங்களில் செய்த சேவைகளை பாராட்டி பேசி கோவில் நிர்வாகம் சார்பாக தமிழ் சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தினார்.

செண்டை
கேரளத்தில் மட்டும் பிரசித்தி பெற்று இருந்த இந்த செண்டை இசைக் கலையை கடல் தாண்டி லண்டனில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மலையாள சங்கத்தினர்(MAUK) இசைத்து நகரையே அதிர வைத்தனர்.

நகைச்சுவை
தமிழ் பள்ளி மாணவ, மாணவிகள் வழங்கிய "வெள்ளை மாளிகை" என்ற நகைச்சுவை நாடகம் அரங்கை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது.

பரதம்
லண்டனை சேர்ந்த பரதக் கலைஞர்கள் பரத நாட்டியம் ஆடினர். தமிழ்ச் சங்கத்தின் முதியோர்கள் குழுவினர் பல பாடல்களை மிகச் சிறப்பாக பாடினர்.

கிராமிய நடனம்
அழிந்து வரும் தொன்மையான தமிழ்க் கலைகளுக்கு பெருமை அளிக்கும் வகையில் தமிழ்ப் பள்ளி மாணவிகளும், குடும்பத் தலைவிகளும் இணைந்து ஆடிய "மதுரை குலுங்க குலுங்க" என்ற கிராமிய நடனத்திற்கு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணை எட்டியது.

ஜும்பா
மாற்றோர் கலைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் நடைப்பெற்ற "பாலிவுட்" மற்றும் "ஜும்பா"(Zumba) நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இளம் மங்கையர்களின் நடனம் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளையடித்தது.

கலை நிகழ்ச்சிகள்
தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை மக்கள் மனதை கவரும் வகையில் மிகச் சிறப்பாக வழங்கி சிறப்பித்தனர். தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகளால் திரைப்பட பாடல்களை கலவையாக கொண்டு வழங்கப்பட்ட நடன நிகழ்ச்சி விழா அரங்கை பார்வையாளர்களின் கரவோசையால் அதிர வைத்தது. விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மெட்ரோபாலிட்டன் காவல்துறை மற்றும் ஜே.எஸ் செக்யூரிட்டி நிறுவனத்தினர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications