17 ஆண்டுகளில் முதன்முறையாக லண்டன் விலங்கியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டி
லண்டன்: 17 ஆண்டுகள் கழித்து லண்டன் விலங்கியல் பூங்காவில் புலிக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள சுமத்ரா புலியான மெலாட்டி கடந்த மாதம் 22ம் தேதி ஒரு புலிக்குட்டியை ஈன்றது. கடந்த 17 ஆண்டுகளில் இந்த விலங்கியல் பூங்காவில் பிறந்துள்ள முதல் புலிக்குட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மெலாட்டி கருவுற்றதில் இருந்து அதை பூங்கா அலுவலர்கள் ரகசிய கேமராக்கள் வைத்து எந்நேரமும் கண்காணித்து வந்தனர். மெலாட்டிக்கு 6 நிமிடத்தில் பிரசவம் நடந்தது ரகசிய மேராக்களில் பதிவாகி இருந்தது.
புலிக்குட்டியின் வரவால் பூங்கா ஊழியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பூங்கா ஊழியர் பால் கைபெட் கூறுகையில்,
இந்த பிரசவம் குறித்து நாங்கள் எல்லோரும் டென்ஷனாக இருந்தோம். இது தான் மெலாட்டிக்கு முதல் பிரசவம். மெலாட்டி மிக விரைவில் குட்டியை ஈன்றது என்றார்.
இதே பூங்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஹரி என்ற புலி தான் மெலாட்டியின் தந்தையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிறந்துள்ள குட்டி ஆணா, பெண்ணா என்பதை தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications