For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்த கோவிலில் இருந்த 'தாமரை'யை பார்த்ததும் மோடிக்கு என்ன நினைவுக்கு வந்தது?

By Siva
Google Oneindia Tamil News

கியோட்டோ: ஜப்பானில் உள்ள புத்த கோவிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த தாமரையை பார்த்ததும் அது தனது பாஜகவின் சின்னத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Lotus at Toji temple a reminder of BJP's symbol: Modi tells Abe

ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி கியோட்டோ நகரில் இருக்கும் பழமை வாய்ந்த புத்த கோவிலான தோஜி கோவிலுக்கு சென்றார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் சென்றார். கோவிலில் இருந்த தாமரையை பார்த்த அபே அது குறித்து மோடிக்கு விளக்கம் அளிக்கத் துவங்கினார்.

உடனே மோடி குறிக்கிட்டு தாமரை பற்றி எனக்கு நன்கு தெரியும். அது தான் என் கட்சியான பாஜகவின் சின்னம் என்று தெரிவித்தார். அதை கேட்ட அபே சிரிக்க மோடியும் சிரித்தார்.

முன்னதாக லோக்சபா தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்த மோடி மேடை தோறும் தாமரையை விளம்பரப்படுத்த தவறவில்லை. ஏன் வாக்களித்த அன்று கூட கட்சியின் சின்னத்தை அவர் விளம்பரப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi and his Japanese counterpart Shinzo Abe shared a light moment on Sunday when the former found himself enchanted by the presence of a lotus attached to a statue of Lord Buddha at the Toji temple in Kyoto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X