Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"3 நாளா உன்னால நல்லா அனுபவிச்சிட்டேன்.. நீயும் அனுபவி.. இந்தா".. அப்படியே ஷாக்காகி போன காதலன்!

1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி காதலனை பழிவாங்கியுள்ளார் ஒரு பெண்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: "உன்னால நான் அனுபவிச்சது போதும்.. நீயும் அனுபவி.. நல்லா அழு" என்று காதலனை பழிவாங்க பெண் ஒருவர் வித்தியாசமான ஐடியாவை கையாண்டுள்ளார்.. அந்த ஐடியாவை பார்த்து நிஜமாகவே காதலன் அழற நிலைக்கு வந்துவிட்டார். இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவில் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.. காதலர் தினம் என்றாலே இனிமையான நிகழ்வுகளும், மனதில் துள்ளி வரும் சந்தோஷங்களுமே அதிகம்.. உலகம் முழுக்கவும் உள்ள காதலர்களுக்கு இந்த உணர்வுதான் அதிகமாக இருக்கும்.

 lovers day: girl takes revenge and sends tonne of onion to her ex boyfriend

அப்படித்தான் சீனாவை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலில் விழுந்தார்.. வேசீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. அவரது பெயர் ஜாவோ.. ரொம்ப நாட்களாகவே அவர் ஒருவரை உயிருக்கு உயிராக விரும்பினார்.. இந்த காதலர் தினத்தில் காதலனுடன் குஷியாக கொண்டாட வேண்டும் என்றும் ஆசைப்பட்டார். ஆனால், அவரது காதலனால் ஒன்றாக இந்த நாளை கொண்டாட முடியாது என்று சொல்லிவிட்டார்.

அதனால் ஜாவோவின் ஆசையில் மண் விழுந்தது.. இந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. 3 நாட்களாக கதறி கதறி அழுதார். இவ்வளவு அழுதும், காதலன் மனசு கரையவில்லையே என்ற ஆத்திரம்தான் வந்தது.. அதனால் கடுமையான கோபம் ஜாவோவுக்கு வந்துவிட்டது. தான் பட்ட கஷ்டம் தன் காதலனும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தார்.. அதற்காக

உடனே 1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்தார்.. அதை காதலன் வீட்டுக்கு பார்சல் செய்தார்.. அதில் ஒரு லட்டரையும் எழுதி வைத்தார்.. "நான் 3 நாட்கள் நல்லா அனுபவிச்சிட்டேன்... அழுது தீர்த்துட்டேன்.. இப்போ உன்னுடைய முறை என்று எழுதினார். வீட்டுக்கு பார்சல் வந்திருப்பதாக விஷயம் தெரிந்ததும் காதலன் துள்ளிகுதித்து கொண்டு வெளியே ஓடிவந்தார்.

அங்கே 1000 கிலோ வெங்காயத்தை பார்த்து மிரண்டு போய் நின்றுவிட்டார்.. வெங்காயத்தை பார்த்து காதலன் ஷாக்கான, இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 1000 கிலோ வெங்காயத்தை வீட்டு முன்பு ஒரு டிரக்கில் இருந்து கொட்ட, கொட்ட, காதலன் முகம் வெளிறி போய் போனது.

இப்போது இவர்கள் பிரிந்துவிட்டார்கள்.. இருவரும் முன்னாள் காதலன், முன்னாள் காதலி ஆகிவிட்டார்கள்.. "என் முன்னாள் காதலி கொஞ்சம் வித்தியாசமானவள்தான், அதுக்காக அழாததற்காக நான் என்ன மோசமானவனா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இவர்களின் இந்த அக்கப்போருக்கு நடுவில் அக்கம்பக்கத்தினர் இன்னொரு பிரச்சனையை கொண்டு வந்துள்ளனர்.. அங்கே கொட்டியுள்ள அந்த 1000 கிலோ வெங்காயம் நாற்றம் அடிக்கிறதாம்.. "முதல்ல எல்லாத்தையும் கிளீன் பண்ணுங்க" என்று சொல்லவும், விழித்து கொண்டு வருகிறார் காதலன்.. ஸாரி முன்னாள் காதலன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+