Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாவ், ராஜ விருந்து.. சிங்கப்பூரில் ட்ரம்ப்-கிம் சாப்பிட்ட மதிய உணவு மெனு இதுதான்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிங்கப்பூரில் ட்ரம்ப்-கிம் மதிய சாப்பாடு மெனு இதுதான்!- வீடியோ

    சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் இன்று சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    எதிரிகளாக பார்க்கப்பட்ட ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோரின் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய நேரப்படி இன்று காலை துவங்கியது. முதலில் சுமார் 40 நிமிடங்கள் தலைவர்கள் மட்டத்திலும், பிறகு விரிவாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

    இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். சிங்கப்பூர் அரசுதான் இந்த செலவீனங்களை பார்த்துக்கொள்கிறது. இந்த சந்திப்பால், சிங்கப்பூர் அரசுக்கு, சுமார் ரூ.101 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    மதிய உணவு மெனு

    மதிய உணவு மெனு

    இதனிடையே, இரு நாட்டு தலைவர்களுக்காக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த மதிய உணவு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு ட்ரம்ப்-கிம்ப் மற்றும் அதிகாரிகளுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. சுவை மற்றும் ஆடம்பர லஞ்ச்சுக்கு சிங்கப்பூர் அரசு முக்கியத்துவம் தந்திருந்தது.

    ஸ்டார்டர்ஸ்

    ஸ்டார்டர்ஸ்

    மதிய உணவு மெனுவில், ஸ்டார்டர்ஸ் (Starters) இதுதான்: பாரம்பரியமிக்க இரால் கோக்டெய்ல், அதனுடன் அவகடோ சலாட். பச்சை மாங்காய் கெரபு அதனுடன் ஹனி லைம் ட்ரெஸ்சிங் மற்றும் ஆக்டோபஸ். இது தவிர 'Oiseon' எனப்படும் கொரிய நாட்டின் புகழ்பெற்ற டிஷ் ஒன்றும் ஸ்டார்டராக பரிமாறப்படுகிறது. வெள்ளரிக்காயுடன், மாட்டிறைச்சி, காளான், முட்டை உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படுவது இது.

    மதிய சாப்பாடு

    மதிய சாப்பாடு

    மெயின் கோர்ஸ் (Main course): ஃபீப் ஷார்ட் ரிப் கான்பிட் எனப்படும் ஒயின் ஊற்றி செய்யப்படும் உணவு, அவிக்கப்பட்ட பிரக்கோலியுடன் potato dauphinois, ரெட் வொயின் சாஸ், பன்றிக்கறியுடன் கூடிய Yangzhou ஃப்ரைட் ரைஸ், சில்லி சாஸ், Daegu jorim soy braised cod fish with radish, காய்கறிகள்.

    இனிப்பு வகைகள்

    இனிப்பு வகைகள்

    சாப்பாட்டுக்கு பிந்தைய Desserts: டார்க் சாக்லேட் டார்ட்லெட் கனாசே, Haagendazs வென்னிலா ஐஸ்க்ரீம் மற்றும் செர்ரி கவுலிஸ் மற்றும் டிராபிஜின்னே. இவைதான் அந்த ராயல் சாப்பாடு லிஸ்ட். படிக்கும்போதே பசிக்க ஆரம்பித்துவிட்டதா?

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+