பெற்ற குழந்தைகளையே தீவிரவாதிகளாக்கிய சிரியா பெண்- 5 ஆண்டுகள் சிறைதண்டனை
பெய்ரூட்: சிரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய சொந்த குழந்தைகளை தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸில் சேர்த்து பயிற்சி பெற வைத்த குற்றத்திற்காக ஜெயில் தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
சிரியாவில் உள்ள லூதான் பகுதியை சேர்ந்த பெண் ரூனாகான். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன.
இவர்களில் 8 வயது மகன் ஒருவனை ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து பயிற்சி பெறவைத்து இருக்கிறார்.

பெருமை அடித்த தாய்:
இது குறித்து பேஸ்புக் இணைய தளத்தில் பெருமை ஆக கூறியுள்ளார். மேலும் மற்ற தாய்மார்களும் தங்களது குழந்தைகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து சண்டைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
போலீசாரால் கைது:
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து ரூனாகானை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 2 வது மகனின் போட்டோ ஒன்று சிக்கியது.
தீவிரவாதி போஸ்:
அதில் அச்சிறுவன் கையில் பொம்மை துப்பாக்கி, மற்றும் தீவிரவாதிகளின் புத்தகத்தை வைத்திருப்பது போன்று படங்கள் இருந்தன. இதே போன்று மற்ற குழந்தைகளின் படங்களும் பிடிபட்டன.
5 ஆண்டுகள் ஜெயில்:
இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் அவருக்கு 5 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது. தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications