அமீரகத்துக்கான இந்தியத் தூதர் சுவிட்சர்லாந்துக்கான புதிய தூதராக நியமனம்
அபுதாபி: அமீரகத்தில் இருந்து விடைபெற்றுச் செல்லும் இந்திய தூதர் எம்.கே. லோகேஷிற்கு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸையித் அல் நஹ்யான் ‘ஆர்டர் ஆஃப் இன்டிபென்டன்ஸ்' (order of independence) எனும் விருது வழங்கி கௌரவித்துள்ளார். லோகேஷ் சுவிட்சர்லாந்துக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்விருது அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகள் மேம்பட உதவியமைக்காகவும், வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பாராட்டியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை அமீரக வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லாஹ் பின் ஸையித் அல் நஹ்யான் அவர்கள் 16.12.2013 அன்று லோகேஷிற்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
விருதைப் பெற்றுக்கொண்ட எம்.கே. லோகேஷ் அமீரக அதிபர் ஷேக் கலீஃபாவிற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். ஷேக் கலீஃபாவின் திட்டங்கள் வளைகுடாவிலும், சர்வதேச அளவிலும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மேலும் அமீரக அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டதுடன் தனது பதவிக் காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியுடன் விடைபெறுவதாக குறிப்பிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications