உயிரோடு இருப்பமானு தெரில.. ரஜினி, கமல்தான் காப்பாத்தணும்.. ஜப்பான் கப்பலில் வீடியோவில் தமிழர் கதறல்
Recommended Video
டோக்கியோ: ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ள கொரோனா பாதிப்பில்லாத இந்தியர்களையும் தமிழர்களையும் மீட்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு க ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோர் உதவ வேண்டும் என அந்த கப்பலில் உள்ள மதுரை அன்பழகன் வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி 1000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஹாங்காங்கிலிருந்து 3700-க்கும் மேற்பட்டோருடன் ஒரு கப்பல் ஜப்பான் சென்று கொண்டிருந்தது. கொரோனா பீதியால் அந்த கப்பல் யோக்கோஹாமா துறைமுகம் அருகே நடுக்கடலில் பிப்ரவரி 5-ஆம் தேதி நிறுத்தப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல்
இந்தக் கப்பலில் உள்ள 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் ஒரே கப்பலில் இருப்பது கொரோனா வைரஸ் பாதிப்பில்லாதோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அன்பழகன்
இதனால் தங்களை காப்பாற்றுமாறு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பினய் குமார் சர்கார், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த கப்பலில் மதுரையை சேர்ந்த அன்பழகனும் சிக்கியுள்ளார்.

வீடியோ
அவரை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் அந்த கப்பலில் உள்ள இந்தியர்கள் மீண்டும் இரு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு வீடியோவில் பினய் குமார் சர்கார் கூறுகையில் ஏராளமான விதிகள் இங்கு பின்பற்றப்படுகிறது. இந்த விதிகளை மீறினால் எங்களுக்கு வேலை போய்விடுமோ அல்லது வேறு வேலையும் கிடைக்காதோ என அச்சமாக உள்ளது.

நோய் பரவும்
நாங்கள் உயிரோடு இருப்போமா இல்லையா என தெரியாமல் நாங்கள் எதற்காக விதிகளை பின்பற்ற வேண்டும். தற்போது இரு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் சாப்பிடும் தட்டுகளை மாற்றி மாற்றி உண்கிறோம். கப்பலில் சுத்தம் இல்லை. எங்களை இந்த இடத்தை விட்டு மீட்காவிட்டால் எங்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
தமிழர் அன்பழகன்
மோடிஜி எனக்கு கடவுள் மாதிரி. பாகிஸ்தானில் இருந்து விங் கமாண்டர் அபிநந்தனை எப்படி காப்பாற்றினாரோ அது போல் எங்களை காப்பாற்ற வேண்டும். நீங்கள் எங்களை காப்பாற்றுவீர் என நம்புகிறோம் என தெரிவித்தார். இதையடுத்து மதுரை அன்பழகன் வெளியிட்ட வீடியோவில் தமிழில் பேசியுள்ளார். அவர் வீடியோவில் தங்கள் பிரச்சினை எழுப்பி கப்பலை விட்டு வெளியே கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications