ஒரு பக்கம் ஜூனோ, மறுபக்கம் கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: வாடும் அமெரிக்கா
கலிபோர்னியா: அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி இருந்தது.
அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதிகளை ஜூனோ பனிப்புயல் வதைத்து வருகிறது. இந்நிலையில் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதி அருகே புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி இருந்தது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

யுரேகாவின் தென்மேற்கில் இருந்து 40 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 17.2 கி.மீ சுற்றளவிற்கு நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டது. தொடக்கத்தில் 5.1 என்ற ரிக்டர் அளவிற்கு வலிமை குறைந்த அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், பின்னர் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் யுரேகா, ஆர்காட்டா, பெர்ன்டேல், பார்ச்சூனா ஆகிய இடங்களில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் சான் ஜோஸ் மற்றும் சாலினாஸ் ஆகிய தொலைதூர பகுதியிலும் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications