இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. மக்கள் அச்சம்!
ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால் வீடுகள் குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. ஆயிரக்கணக்காகன தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாடு, நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் ரிங்க் ஆப் பயர் எனப்படும் இடத்தில் பூகோள ரீதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. எனினும் அவ்வப்போது சில கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதி அடைய வைத்து விடுகிறது.

அந்த வகையில் இன்று அதிகாலை இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 6.55 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
நேற்று அதிகாலை வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கொல்கத்தாவிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகின. வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.1 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் ஏதேனும் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்குமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை.
இந்தோனேசியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுலவேசி தீவுகளில் 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க்த்தால் அங்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 100 பேர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
2018 ஆம் ஆண்டு பாலு தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல, 2004 ஆம் ஆண்டு ரிக்டர் அலவில் 9.1 என மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமியும் ஏற்பட்டது.1,70,000 பேர் இந்த நிலநடுக்கத்தால் பலியாகினர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications