மெக்சிகோவில் 7.5 அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்... கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்!
மெக்சிகோவின் தென்கிழக்கில் 7.2 அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மெக்சிகோ சிட்டி : தெற்கு மெக்சிகோவில் 7.2 அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஓக்சாகாவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜியாலஜிகல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகில் போதை பொருள் கடத்தலுக்காக அதிகம் கொலைகள் நடைபெறும் மெக்சிகோ நாட்டின் தெற்கே மெக்சிகோ சிட்டியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மெக்சிகோ சிட்டியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
ஓக்சாகா என்ற பகுதியில் மையமாகக் கொண்டு பசிபிக் கடலோரம் 26.7 மைல்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோ நகரத்தில் உயரம் ஆன கட்டிடங்கள் ஒரு நிமிடத்திற்கும் மேல் ஊசலாடின. தெற்கு பகுதியில் உள்ள கவுதமாலா நகர் வரை உணரப்பட்டு உள்ளது. இதனால் அச்சத்தில் உறைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் தஞ்சடைந்தனர். ஓக்சாகா விரைந்துள்ள அவசரகால உதவிக்குழு பொருட்கள் மட்டுமே சேதமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில் நிலநடுக்கம் உருவாகி இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2 முறை மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 8ல் ஏற்பட்ட 8.1 அளவு நிலநடுக்கத்தில் 90 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 19ல் 7.1 அளவு மெக்சிகோ சிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 216 பேர் பலியாகினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications