இரவோடு இரவாக தாக்கிய நிலநடுக்கம்.. தென் அமெரிக்காவில் 8 ரிக்டரில் பூகம்பம்.. மக்கள் பீதி
பியூனஸ் அயர்ஸ்: தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான டிரேக் பாசேஜ் பகுதியில், ரிக்டர் அளவுகோலில் 8.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பல கிமீ தொலைவுக்கு உணரப்பட்டது. மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
சமீப காலங்களாகவே சக்திவாய்ந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இதனால் மிக மோசமான இழப்புகளும் பேரழிவும் ஏற்படுகிறது. பூமிக்கு அடியில் உள்ள டெக்டோனிக் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதாலும் உரசுவதாலுமே இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான நிலநடுக்கம் தான் இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான டிரேக் பாசேஜ் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.0ஆக பதிவாகியுள்ளது. இதை அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதிப்படுத்தியுள்ளது. 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்தப் பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் இது 7.1 ரிக்டர் என சொல்லப்பட்ட நிலையில், பிறகே அது 8 ரிக்டர் என்பது உறுதியானது.
இந்த சக்திவாய்ந்த பூகம்பத்தால் எந்தவொரு சேதம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. மேலும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. டிரேக் பாசேஜ் என்பது சிலியில் உள்ள கேப் ஹார்னை அண்டார்டிக் தீபகற்பத்திலிருந்து பிரிக்கும் பகுதியாகும். இது உலகின் மிகக் கொந்தளிப்பான நீர்நிலைகளில் ஒன்றாகும்.
இந்தப் பிராந்தியம் தொலைதூரத்தில் இருப்பதாலும், மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் அடுத்த சில மணி நேரம் அல்லது சில நாட்கள் வரை சில அதிர்வுகள் தொடரும் என தெரிகிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications