மாயமான மலேசிய விமானம் கீழே விழவும் இல்லை, வெடித்துச் சிதறவும் இல்லை: ஐ.நா. அமைப்பு
நியூயார்க்: மாயமான மலேசிய விமானம் எங்கும் விழவும் இல்லை, வெடித்துச் சிதறவும் இல்லை என்று ஐ.நா.வின் சி.டி.பி.டி.ஓ. அமைப்பு தெரிவித்துள்ளது.
வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது ஐ.நா.வின் அணுகுண்டு சோதனை தடை உடன்பாடு அமைப்பு (சி.டி.பி.டி.ஓ.). அந்த அமைப்பு அணுகுண்டு சோதனைகளை கண்டறிய பல கருவிகளை பல்வேறு இடங்களில் நிறுவியுள்ளது. அந்த கருவிகள் பெரிய ரக விமானம் வெடித்துச் சிதறினாலோ, கடலில் மூழ்கினாலோ, நிலத்தில் விழுந்தாலோ கண்டுபிடித்துவிடும்.

ஆனால் அந்த கருவிகள் இதுவரை அப்படி எதையும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் வெடித்துச் சிதறவும் இல்லை, எங்கும் விழவும் இல்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
விமானம் எதுவும் வானில் வெடித்துச் சிதறியதா என்பதை கண்டறியுமாறு ஐ.நா. உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளை சிடிபிடிஓ செயலாளர் லசினா ஜெர்போ கடந்த வாரம் கேட்டுக் கொண்டார். ஆனால் இதுவரை வானில் எந்த விமானமும் வெடித்துச் சிதறியதாக தகவல் இல்லை.
அதனால் மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications