சீன கடலில் மாயமான விமானத்தின் பாகங்கள் எதுவும் இல்லை: மலேசியா அறிவிப்பு - தொடரும் பெரும் குழப்பம்!
கோலாலம்பூர்: தென் சீன கடல் பகுதியில் மாயமான விமானத்தில் பாகங்கள் எதுவும் இல்லை என்று மலேசிய சிவில் விமான போக்குவரத்து துறை தலைவர் அசாருத்தீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் தென் சீன கடல் பகுதியில் சென்றபோது மாயமானது. அதில் இருந்து இன்று வரை விமானம் என்ன ஆனது, அதில் பயணித்த 239 பேரின் கதி என்ன என்று இதுவரை ஒன்றும் தெரியவில்லை.

இந்நிலையில் மலேசியா மற்றும் வியட்நாம் இடையேயான கடற்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சீனா 3 செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டது.
இதையடுத்து சீன வெளியிட்ட புகைப்படங்களில் உள்ள இடத்தில் தேடியதில் விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று மலேசிய சிவில் விமான போக்குவரத்து துறை தலைவர் அசாருத்தீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பகுதியில் விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று வியட்நாம் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் உள்ள பயணிகளில் 154 பேர் சீனர்கள் என்பதால் சீன அரசு மலேசிய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications