ஓவர் ஆபாசம்.. ஜெனிபர் லோபஸின் ஹஸ்ட்லர்ஸ் படத்துக்கு மலேசியாவில் தடை!
மலேசியாவில் ஜெனிபர் லோபஸின் ஹஸ்ட்லர்ஸ் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கோலாலம்பூர்: பிரபல நடிகை ஜெனிபர் லோபஸ் நடித்த ஹஸ்ட்லர்ஸ் படத்தை திரையிட மலேசிய அரசு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை ஜெனிபர் லோபஸ். சுருக்கமாக ரசிகர்கள் இவரை ஜே.லோ என்று குறிப்பிடுவர். ஹாலிவுட் நடிகை என்பதோடு, பாடகி, டான்ஸர், ஃபேஷன் டிசைனர் மற்றும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளர் இவர்.

தன்னுடைய அழகாலும் திறமையாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவரான ஜெனிபர் லோபஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஜெனிபர் லோபஸ் தற்போது ஹஸ்ட்லர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜெனிபருடன் ஜூலியா ஸ்டில்ஸ், கெகே பால்மர், கான்ஸ்டன்ஸ் வூ ஆகியோரும் நடித்துள்ளனர். 2015-ம் ஆண்டு பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 9ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீசானது. இப்படத்தில் ஆபாசக் காட்சிகள் அதிகம் உள்ளன. எனவே, இதனை மலேசியாவில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் தணிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹஸ்ட்லர்ஸ் படத்தில் அரை நிர்வாண காட்சிகள், பாலுணர்வைத்தூண்டும் நடனங்கள், போதைப்பொருள் காட்சிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. எனவே, இப்படம் இங்குள்ள மக்களுக்கு திரையிட ஏற்றது அல்ல" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் தடை விதிக்கப்பட்டபோதும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஹஸ்ட்லர்ஸ் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
முன்னதாக இதே போல், தமிழ்ப் படமான கடாரம் கொண்டானுக்கும் மலேசியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. விக்ரம் நடித்திருந்த அப்படத்தில் மலேசிய போலீஸ் குறித்து தவறாக சித்தரிக்கப் பட்டிருந்ததாக கூறி தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications