16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: ஆஸ்திரேலியா, பிரேஸில், இந்தோனேசியா போன்ற நாடுகளை தொடர்ந்து சமூக ஊடகங்களின் தாக்கம் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை விதித்து மலேசியா அரசு உத்தரவிட்டுள்ளது.
திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின்படி, 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் புதிய சமூக ஊடக கணக்குகளை தொடங்கவோ, ஏற்கனவே உள்ள கணக்குகளை தொடர்ந்து பயன்படுத்தவோ முடியாது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்கள் அனைத்தும் இந்த விதியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Malaysia Bans Social Media

குறிப்பாக, 80 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட தளங்களுக்கு இந்த உத்தரவு நேரடியாக பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கணக்குகளை உருவாக்கும் போது வயது சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மலேசியா அரசு

இதற்காக அரசு அங்கீகரித்த அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வயதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் சிறார்கள் தவறான தகவல்களை வழங்கி கணக்குகளை தொடங்குவதை தடுக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர். அதேநேரத்தில், ஏற்கனவே சமூக ஊடகங்களில் கணக்குகளை வைத்திருக்கும் சிறார்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நிறுவனங்களுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்திற்குள் தங்களது பயனர்களின் வயது விவரங்களை ஆய்வு செய்து, விதிமுறைக்கு முரணான கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

சமூக ஊடக தடை

இந்த சட்டத்தை பின்பற்ற தவறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்பட உள்ளது. வயது சரிபார்ப்பு முறைகளை சரியாக செயல்படுத்தாத நிறுவனங்களுக்கு 1 கோடி ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும். இந்திய மதிப்பில் இது சுமார் 24 கோடி ரூபாயாகும். இருப்பினும், இந்த விதிமுறையில் ஒரு முக்கிய அம்சத்தை மலேசிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தடையை மீறி சிறார்கள் தவறான தகவல்களை வழங்கி கணக்குகளை தொடங்கினாலும், அதற்காக அவர்களது பெற்றோருக்கு எந்தவித அபராதமோ அல்லது குற்றவியல் நடவடிக்கையோ எடுக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

சிறார்கள் இணைய பாதுகாப்பு

மலேசிய அரசின் இந்த நடவடிக்கை ஆதரவையும் எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் பெற்றுள்ளது. ஆனால், பல பெற்றோர்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். சிறுவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவதால் ஏற்படும் மனஅழுத்தம், இணையதள துன்புறுத்தல், தவறான தகவல்கள் மற்றும் ஆபத்தான சவால்கள் போன்றவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க இந்த சட்டம் உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.
மறுபுறம், சில கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யூடியூப்

கல்வி சார்ந்த வீடியோக்கள், அறிவியல் மற்றும் திறன் மேம்பாட்டு உள்ளடக்கங்கள் போன்றவற்றை யூடியூப் உள்ளிட்ட தளங்கள் மூலம் பல மாணவர்கள் கற்றுக்கொண்டு வருகின்றனர். புதிய தடை அவர்களின் கல்வி வாய்ப்புகளையும் பாதிக்கக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், வயது சரிபார்ப்புக்காக அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய நிலை உருவாகுவதால் பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த தகவல்கள் பாதுகாப்பாக கையாளப்படுமா என்ற சந்தேகத்தையும் சில அமைப்புகள் முன்வைத்துள்ளன.

உலக நாடுகள்

சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து உலக நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வரும் சூழலில் மலேசியாவின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரேஸில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் சிறார்களின் சமூக ஊடக பயன்பாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. அதேபோல் பிரிட்டன், பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் இதேபோன்ற சட்டங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணைய சுதந்திரத்திரம்

தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக முன்னேறி வரும் காலத்தில், குழந்தைகளின் பாதுகாப்புக்கும், இணைய சுதந்திரத்திற்கும் இடையே ஒரு பாதுகாப்பான இடைவெளியை ஏற்படுத்துவது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அந்த வகையில், மலேசியாவின் இந்த புதிய சட்டம் எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+