மாயமான விமானம் கடலுக்குள் விழுந்ததை கண்டறிய உதவிய சாட்டிலைட் தகவல்கள் வெளியீடு
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தின் செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயானது. பின்னர் அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் மாதக்கணக்கில் தேடும் பணி நடந்து வருகிறபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தை சேர்ந்த இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு வந்த சிக்னல்களை வைத்து மலேசிய விமானம் தெற்கு இந்திய கடல்பகுதியில் விழுந்தது என்பதை கூறியதே இந்த இன்மார்சாட் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விமானம் கடலுக்குள் விழுந்தது என்பதை தீர்மானிக்க உதவிய செயற்கைக்கோள் தகவல்களை வெளியிட மலேசியா முதலில் தயங்கியது. இதையடுத்து அந்த தகவல்களை வெளியிடுமாறு விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பிறகே செயற்கைக்கோள் தகவல்களை மலேசியா இன்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications