மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் தூதர் உள்பட 6 பேர் உயிரிழப்பு!
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்காவுக்கான முன்னாள் மலேசிய தூதர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் மகள் திருமண வரவேற்பு நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை கோலாலம்பூருக்கு திரும்ப அழைத்து வர ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பிரதமரின் மூத்த உதவியாளர் அஸ்லின் அலியாஸ், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜமாலுதின் ஜார்ஜிஸ் உள்பட 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் கோலாலம்பூர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோலாலம்பூரின் புறநகர் பகுதியான சிமனி பகுதியில் ஹெலிகாப்டர் வந்த போது திடீரென நடுவானில் நொறுங்கி கீழே விழுந்தது.
இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவலை பிரதமர் நஜிப் ரசாக் உறுதி செய்தார்.












Click it and Unblock the Notifications