ஏன் சோபியா இப்படி செஞ்சீங்க.. தெரியாமதான் செஞ்சுட்டேன்.. ஒரு கலகல சம்பவம்
நாய்க்குட்டி என்று நினைத்து கரடிக்குட்டியை வளர்த்து வந்துள்ளார் ஒரு பாடகி
கோலாலம்பூர்: "ராத்திரி நேரம்.. ரோட்டோரம் ஒரு குட்டி இருந்தது... பாவம் அதுக்கு அடிபட்டு இருந்தது.. இரக்கப்பட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.. அது நாய்க்குட்டின்னு தான் நினைச்சேன்.. கடைசியில பார்த்தால் இப்படி ஆயிடுச்சே.. " என்று போலீசில் புலம்பி தள்ளினார் சோபியா.
மலேசியாவின் பிரபல பாடகிதான் ஸரித் சோபியா யாசின். வயசு 27 ஆகிறது. இப்போது இவர் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
சில மாசத்துக்கு முன்பு, ஒருநாள் இவர் வேலையை முடித்துகொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அது ஒரு காட்டுப்பகுதி. வரும் வழியில் ரோட்டோரம் ஒரு நாய்க்குட்டி கிடந்ததை பார்த்தார். அதற்கு உடம்பெல்லாம் அடிபட்டு காயங்களுடன் இருந்தது.

செல்லப்பிராணி
சோபியாவுக்கு அந்த குட்டியை அங்கேயே விட்டுவிடு போக மனசில்லை. ராத்திரி எல்லாம் வலியுடன் கஷ்டப்படுமே என்று அதனை தன் வீட்டிற்கே கொண்டு சென்றுவிட்டார். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தார். குட்டி உடம்பு தேறிவிட்டது. ஆனாலும் அதனை வெளியில் விட மனசில்லாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்த்தார். யாரிடமும் ஒப்படைக்கவும் அவர் தயாராக இல்லை.
ப்ரூனோ
அந்த குட்டியும் சோபியா பேச்சை மீறியதே இல்லை.. அவரிடம் அப்படி ஒட்டிக் கொண்டுவிட்டது. அதனால் சோபியாவின் செல்லப்பிராணியாக அந்த குட்டி வளர ஆரம்பித்தது. அதற்கு ப்ரூனோ என்று ஒரு செல்ல பெயரையும் சோபியா வைத்துவிட்டார். குட்டியுடன் விளையாடுவதை, கொஞ்சுவதை எல்லாம் போட்டோ, வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டு வந்தார். இதுவரைக்கும் ஓகேதான்.. சில நாட்களுக்கு முன்புதான் விவகாரம் வெடித்தது.

வைரல் வீடியோ
ஒருநாள் அந்த குட்டி சோபியா வீட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. இதனை அந்தப்பக்கமாக சென்ற 2 பேர் பார்த்துவிட்டு போட்டோ எடுத்து இணையத்திலும் போட்டுவிட்டனர். ஏற்கனவே சோபியா பதிவிட்ட வீடியோவுடன் இதுவும் சேர்ந்து வைரல் ஆக ஆரம்பித்ததும், வனத்துறை, போலீஸ் என எல்லாரும் சோபியா வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

சோபியா கைது
"யாரை கேட்டுக்கிட்டு இந்த கரடியை வீட்டில் வளர்க்கறீங்க?" என்றனர். இதை கேட்டதும் சோபியாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவர்கள் சொன்னபிறகுதான் அது நாய்க்குட்டி இல்லை, கரடிக்குட்டி என்பது சோபியாவுக்கு தெரிந்தது. ஆனாலும் விடாத போலீஸார் சோபியாவைக் கைது செய்து விட்டனர்.

விளக்கம்
"குட்டி சின்னதா இருந்தது.. அதனால அது நாய்க்குட்டின்னு நெனச்சிட்டேன். கரடின்னு எனக்கு தெரியாது. உயிருக்கு போராடிட்டு இருந்தது..அதான் எடுத்துவந்தேன்" என்று விளக்கம் அளித்து கொண்டிருக்கிறார் சோபியா. கரடிக்குட்டியை நாய்க்குட்டியாக நினைத்து பாவித்து விளையாடிய சோபியாதான் இப்போது மலேசியாவின் ஹாட் டாக்!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications