ரூ.4,600 கோடி முறைகேடு புகாரிலிருந்து மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் விடுவிப்பு !
கோலாலம்பூர்: சவூதி அரச குடும்பத்திடமிருந்து 68.1 கோடி டாலர் (சுமார் ரூ.4,600 கோடி) முறைகேடாக நன்கொடை பெற்ற குற்றச்சாட்டிலிருந்து மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் (62) நேற்று விடுவிக்கப்பட்டார்.
மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் மீது 68.1 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.4,500 கோடி) நிதி முறைகேடு புகார் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1எம்டிபி என்ற அரசு முதலீட்டு நிதியத்திலிருந்து ரூ.4,500 கோடி நிதி மோசடி செய்து அதனை, தனது சொந்த வங்கிக் கணக்குகளில் போட்டு வைத்ததாக நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவரின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் நன்கொடை பெற்ற குற்றச்சாட்டிலிருந்து அவர் நேற்று விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் முகமது அபண்டி அலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சவூதி அரேபியாவிலிருந்து பிரதமர் நஜீப் 68.1 கோடி டாலர் நன்கொடை பெற்றது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முறைகேடு எதுவும் நடைபெற்றதாகக் கண்டறியப்படவில்லை. அந்த நன்கொடைக்கு பிரதிபலனாக, நஜீப் ரஸாக் தனது பிரதமர் பதவியைப் பயன்படுத்தி எந்தச் சலுகையையும், யாருக்கும் வழங்கியதாக விசாரணையில் தெரியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆதாரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டு, நன்கொடை பெற்றதில் பிரதமர் நஜீப் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து ரஸாக் நஜீப் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதன்மூலம், இந்தக் குற்றச்சாட்டு காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த நஜீப், அந்த நிர்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications