விமானம் எம்.ஹெச்.17...: 1717, 777 எண்கள் மீது பெட் எடுப்பதை நிறுத்திய மலேசிய லாட்டரி கடைகள்
கோலாலம்பூர்: உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட விமானத்தின் எண்ணுடன் தொடர்புடைய எண்கள் மீது பெட் எடுப்பதை மலேசிய லாட்டரி கடைகள் நிறுத்தியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. அந்த சோகத்தில் இருந்தே இன்னும் மலேசிய மக்கள் மீண்டு வரவில்லை. இந்நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் 298 பேர் பலியாகினர்.
இந்த 2 சம்பவங்களால் மலேசியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்
மலேசியாவில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்கும் கடைகள் சுட்டுத்தள்ளப்பட்ட மலேசிய விமானத்தின் எண்ணுடன் தொடர்புடைய எண்கள் மீது பெட் எடுப்பதை நிறுத்தியுள்ளன.

1717
1717 மற்றும் 777 ஆகிய எண்கள் மீது பெட் எடுப்பதை டா மா காய், டோட்டோ, மேக்னம் ஆகிய கடைகள் நிறுத்தியுள்ளன. சுட்டுத்தள்ளப்பட்ட மலேசிய விமானம் போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில்
மலேசியாவில் சூதாட்டம் மிகவும் பிரபலம். அதிலும் நான்கு எண்கள் கொண்ட லாட்டரி மக்களுக்கு மிகவும் பிடித்தமானது.

அதிர்ஷ்டம்
ஏதாவது துரதிர்ஷ்டத்துடன் தொடர்புடைய எண்கள் ராசியானவை என்று சூதாடும் பல ஆசியர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக விபத்துக்குள்ளான காரின் எண் மீது பெட் கட்டினால் அது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்புகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications