மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்
மாலே: மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்துள்ள இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இருக்கும் கோத்தபாய ராஜபக்சேவை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் தலைநகர் மாலேவில் வசிக்கும் இலங்கை மக்களும் கோத்தபாய ராஜபக்சேவை வெளியேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
Recommended Video
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோத்தபாய ராஜபக்சே. அத்துடன் ராஜினாமா கடிதத்திலும் கையெழுத்திட்டார் கோத்தபாய.

தப்பி ஓடிய கோத்தபாய
இதனையடுத்து பொதுமக்களால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருதி, இலங்கையைவிட்டே தப்பி ஓட முடிவு செய்தார் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் கோத்தபாய ராஜபக்சேவுக்கு அகதியாக கூட அடைக்கலம் தர அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வரவில்லை. கோத்தபாயவின் தம்பி பசில் ராஜபக்சே, விமான நிலையத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.

மாலத்தீவில் தஞ்சம்
இதனால் இன்று அதிகாலை ஒருவழியாக இலங்கையைவிட்டு விமான படை விமானத்தில் மாலத்தீவு நாட்டுக்குள் அகதியாக தஞ்சமடைந்தார் கோத்தபாய ராஜப்கசே. மாலத்தீவு சபாநாயகரும் முன்னாள் அதிபருமான நஷீத், கோத்தபாயவை தமது வாகனத்தில் அழைத்துச் சென்றார். இலங்கையைவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி தப்பி ஓடியது இதுவே முதல் முறையாகும். இலங்கையைவிட்டு கோத்தபாய தப்பி ஓடிவிட்டதை இலங்கை விமானப் படை, பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளன.

மாலத்தீவில் போராட்டம்
இதனிடையே கோத்தபாய ராஜபக்சேவுக்கு அகதியாக பாதுகாப்பு வழங்கக் கூடாது என்கிற எதிர்ப்பு குரல்கள் மாலத்தீவில் வலுத்துள்ளன. இலங்கை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கோத்தபாய ராஜபக்சேவை மாலத்தீவை விட்டே வெளியேற்ற வேண்டும்; மாலத்தீவு- இலங்கை இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் மாலத்தீவு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல் தலைநகர் மாலேவில் வசிக்கும் இலங்கை மக்களும், கோத்தபாயவை வெளியேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

அன்று மகிந்த
ஏற்கனவே இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இலங்கையில் கடற்படையிடம் தஞ்சமடைந்திருந்தார். அங்கிருந்து கப்பல் மூலமாக மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். மாலத்தீவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் மகிந்த பதுங்கி இருந்துவிட்டு இலங்கைக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications