"இந்தியாவுக்கு நன்றி.." திடீரென டோனை மாற்றும் மாலத்தீவு அதிபர்.. மொத்தமா மாறிட்டாரே.. என்ன காரணம்?
மாலே: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோசமான உறவு நிலவி வரும் நிலையில், இப்போது அந்த நிலை மெல்ல மாற தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த மாலத்தீவு சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் அதிபர் முய்சு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்தாண்டு மாலத்தீவு அதிபராகப் பொறுப்பேற்றது முதலே முய்சு தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தார். அங்கிருந்த இந்தியா ராணுவத்தினரை வெளியேற வைத்தார்.

மேலும், அந்நாட்டின் அமைச்சர்கள் சிலர் நமது பிரதமருக்கு எதிராகக் கூறிய சில கருத்துகளும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் இரு நாட்டு உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டது.
நன்றி: ஆனால், இப்போது இந்த நிலை மாற தொடங்கியுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இப்போது இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாலத்தீவு இந்தியாவுக்கு அளிக்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சில தளர்வுகளை இந்தியா அறிவித்துள்ள நிலையில், அதற்கு மாலத்தீவு அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா மாலத்தீவு இடையே உறவுகள் வலுவாக இருக்கும் என்றும் இரு நாடுகளும் விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் நம்பிக்கை இருப்பதாக முய்சு தெரிவித்தார். மாலதீவில் நடைபெற்ற அந்நாட்டின் சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போது முய்சு இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
மாலத்தீவு அதிபர்: தனது எட்டு மாத கால ஆட்சியில் வெளியுறவுக் கொள்கைகள் மிகச் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்த அவர், சர்வதேச அளவில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதை எளிதாக்க இந்தியா மற்றும் சீனா அளித்துள்ள ஆதரவுக்கு முய்சு நன்றி தெரிவித்தார். இந்த இரு நாடுகளின் ஆதரவு காரணமாகவே மாலத்தீவின் பொருளாதார இறையாண்மையை உறுதிப்படுத்த முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச வர்த்தகத்திற்குத் தேவையான அமெரிக்க டாலருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாக இந்தியா மற்றும் சீன அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பிரிட்டன் அரசு உடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போடுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். அதேபோல இந்தியா உடனும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்திடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சரி செய்ய முயற்சி: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவில் கடந்தாண்டில் விரிசல் ஏற்பட்ட நிலையில், அதைச் சரி செய்ய இப்போது அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாலத்தீவுக்கு இந்தியா ரொம்பவே முக்கியமான நட்பு நாடு என்பதை உணர்ந்த முய்சு தனது அரசு செய்த தவறுகளை சரி செய்ய முயன்று வருகிறார்.
கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்ற நிலையில், அந்த பதவியேற்பு விழாவில் அதிபர் முய்சு நேரடியாகக் கலந்து கொண்டார். மேலும், மாலத்தீவின் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளி என்று கூறிய அவர், அதில் எந்த கேள்வியும் இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
என்ன காரணம்: கடந்த ஆண்டு இறுதிக்குள் மாலத்தீவு இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை 6.2 பில்லியன் மாலத்தீவு ரூஃபியாவாக இருந்தது. இந்த தொகையை மறுசீரமைக்க வேண்டும் என்று மாலத்தீவு விடுத்த கோரிக்கையை ஏற்று, கடன் தொகையைத் திருப்பி செலுத்த இந்தியா கூடுதல் கால அவகாசத்தைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்காகவே இப்போது இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி தெரிவித்துள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications