‛‛மண்டை ஓட்டுடன் சூனியம்’’.. அலறிய மாலத்தீவு அதிபர்.. சதி செய்த 2 அமைச்சர்களின் நிலைமையை பாருங்க
மாலி: மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக அந்நாட்டின் அமைச்சர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவுதான் மாலத்தீவு. ஆனால் இந்நாட்டின் செயல்பாடுகள் கடந்த காலங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. சமீபத்தில்தான் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், முகமது முய்ஸு புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீனாவுடன் நெருக்கம் காட்டி, இந்தியாவை அதிகம் பகைத்துக்கொண்டார். இதனால் மாலத்தீவு குறித்து இந்தியாவில் அதிகம் பேச்சு அடிப்பட்டது.

இப்படி இருக்கையில், தற்போது மற்றொரு விவகாரம் குறித்து அதிபர் முகமது முய்ஸுவின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. அதாவது முய்ஸுவுக்கு சூனியம் வைத்ததாக அந்நாட்டு அமைச்சர் பாத்திமத் ஷம்னாஸை மற்றும் மற்றொரு அமைச்சரான ஆடம் ரமீஸ் என 2 அமைச்சர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பாத்திமத் ஷம்னாஸ் மாலத்தீவின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்து வந்தார். தற்போது இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
பொதுவாக மாலத்தீவில் பில்லி சூனியம் விவகாரம் அடிக்கடி பெரும் பஞ்சாயத்தாக வெடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனதூவி பகுதியில் 62 வயது மூதாட்டி பக்கத்து வீட்டுக்காரரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் மூதாட்டி பில்லி சூனியம் வைத்ததாகவும், எனவேதான் குத்தினேன் என்றும் பக்கத்து வீட்டுக்காரர் கூறியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த சம்பவத்திலும் மூதாட்டி ஈடுபடவில்லை என போலீசார் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு முன்னர் 2012ல் மற்றொரு சம்பவம் நடந்தது. அந்த ஆண்டு ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டம் ஆளும் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியது. எனவே எதிர்க்கட்சி தலைவர்களை தேடி தேடி கைது செய்தனர். அவர்களது அலுவலகங்களில் ரெய்டு நடத்தினர். இப்படி ரெய்டு நடத்தியபோது எதிர்க்கட்சியினர் சிலர் சபிக்கப்பட்ட சேவலை போலீஸ்காரர்கள் மீது வீசியுள்ளனர். இதனால் போலீசார் அப்படியே பின்வாங்கினர்.
இப்படியாக மாலத்தீவில் பில்லி சூனியம் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது அதிபர் முய்ஸுவுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இது தொடர்பாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
மாலத்தீவை பொறுத்தவரை பில்லி சூனியம் வைப்பது என்பது கிரிமினல் குற்றம் கிடையாது. ஆனால், இஸ்லாமிய சட்டத்தின் கீழ், இதற்காக 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும். பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்டவற்றின் மூலம் எதிர் தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட முடியும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications