காதலியைக் கொன்று சடலத்துடன் செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்ட இளைஞர்... சீனாவில்!
பெய்ஜிங்: சீனாவில் இளைஞர் ஒருவர் காதலியைக் கொன்று, அவரது சடலத்துடன் செல்பி எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் செல்பி மோகம் தலை விரித்தாடுகிறது. குழந்தைகள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சமயங்களில் உயிருக்கு எமனாகவே மாறி விடுகிறது செல்பி.

இடம் பொருள் காலநிலை பார்க்காமல் அனைத்து இடங்களிலும் செல்பி எடுப்பவர்களின் ஆதிக்கம் காணப்படுகிறது. சமீபத்தில் இறந்து போன தாத்தாவுடன் சிறுவன் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வைரலாக வலம் வந்தது.
இந்நிலையில், சீனாவில் காதலியைக் கொன்று அவரது சடலத்துடன் செல்பி எடுத்து டெரர் காட்டியுள்ளார் இளைஞர் ஒருவர்.
'குன்' என்ற அடை மொழியுடன் பெயர் கொண்ட அந்த இளைஞர், 'லின்' என்ற பெண்ணை உருகி உருகி காதலித்து வந்துள்ளார். காதல் வானில் சிறகடித்துப் பறந்த காதலர்களின் வாழ்க்கையில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
சம்பவத்தன்று வழக்கம் போல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குன், தனது காதலியைக் கொலை செய்தார்.
அதன் பின்னர், தனது காதலியின் சடலத்துடன் அவர் செல்பியும் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை இணையத்திலும் அவர் வெளியிட்டார். கூடவே, காதலர்களாக இருந்த போது தாங்கள் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளார் குன்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரைக் கைது செய்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications