அனகோண்டாவுக்கு "இரை"யாகப் போகும் அமெரிக்க இளைஞர்... டிஸ்கவரியின் “ஈட்டன் லைவ்”!
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில், "நான் அனகோண்டா உயிரோடு விழுங்கவிருக்கும் முதல் நபராக இருப்பேன்" எனும் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என தெரிவிக்கப்பட்டுள்ள பால் ரோசொலி எனும் நபர்தான் அந்த மனிதர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "டிஸ்கவரி சேனலில் டிசம்பர் மாதம் ஒளிப்பரப்பாக இருக்கும் "ஈட்டன் லைவ்" எனும் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட புரோமோ இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரத்யேக உடை:
இந்நிகழ்ச்சியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடையை அணிந்திருக்கும் பால் ரோசொலி, அனகோண்டாவால் உயிரோடு விழுங்கப்படுவாரென கருதப்படுகிறது.
விலங்குகளை துன்புறுத்த மாட்டேன்:
இது தொடர்பாக பால் ரோசொலி அவரது டுவிட்டர் பதிவில், "நான் எப்போதும் விலங்குகளை துன்புறுத்த மாட்டேன். இது எப்படி சாத்தியம் என்பதை அறிய நீங்கள் ஈட்டன் லைவ் நிகழ்ச்சியை பார்க்கவேண்டும்" என தெரிவித்துள்ளார்.
விலங்குகள் நல ஆர்வலர்கள்:
இந்த நிகழ்ச்சி பாம்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் இதனை டிஸ்கவரி கைவிட வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அனகோண்டா பாவம்:
"இந்த முட்டாளை உயிரோடு விழுங்கசெய்து, அதன் பின்பு வெளியே எடுக்க அனகோண்டாவின் மொத்த சக்தியும் போய்விடும்.
பாதிப்புக்கு ஆளாகும் விலங்குகள்:
கேளிக்கைக்காக விலங்குகளை பயன்படுத்தும்போது அவை பாதிப்பிற்கு ஆளாவதை மறுக்க முடியாது" என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications