சபாஷ்.. சலிப்பே வரலயே.. "புதையலை" தட்டி தூக்கிய தாத்தா.. அதுவும் 80 ஆண்டுக்கு பிறகு.. எங்கே தெரியுமா
தாத்தா வரைந்து கொடுத்த மேப்பை கொண்டு புதையலை தேடும் பணியில் ஜான் கிளாஸெவ்ஸ்கி ஈடுபட்டுள்ளார்.
கீவ்: உக்ரைனில் இரண்டாம் உலக்போரின் போது தனது குடும்பம் புதைத்து வைத்த புதையலை ஒருவர் 80 ஆண்டுகள் கழித்து கண்டெடுத்துள்ளார்.
கிழக்கு போலாந்தை சேர்ந்தவர் ஜான் கிளாஸெவ்ஸ்கி. இவர் பிறந்தபோது பெரியதாக இருந்த குடும்பம், இவர் வளர வளர சிறியதாகிக்கொண்டே வந்தது. கடைசியாக எஞ்சிய இவரது தந்தையும் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். தனிமையில் இருந்த ஜான் கிளாஸெவ்ஸ்கிக்கு தனது தாத்தா சொல்லிய விஷயம் திடீரென ஆவலை தூண்டியுள்ளது. அதாவது இவரது தாத்தாவின் சொந்த ஊர் கிழக்கு போலாந்து கிடையாது. போருக்கு பயந்து குடும்பத்தை காக்க வந்த இடம்தான் இது.
அதற்கு முன்னர் இவர்கள் தற்போதைய மேற்கு உக்ரைனின் லிலீவ் பகுதியில் வசித்து வந்திருந்தனர். 1939ம் ஆண்டு ஜெர்மனிக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூண்டது. இந்த போரில் ரஷ்யாவின் படைக்கு பயந்து கிளாஸெவ்ஸ்கி குடும்பம் கிழக்கு போலந்துக்கு தப்பி ஓடியது. அதற்கு முன்னதாக தங்களிடம் இருந்த தங்கம், வெள்ளி பொருட்களை பாதாள அறைக்குள் வைத்துவிட்டது. உயிர் பிழைத்தால் மீண்டும் இதனை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி தப்பினர்.

போர்
தப்பிக்கும் முயற்சியில் குடும்ப தலைவர் சோவியத் ராணுவத்தால் கொல்லப்பட்டார். உயிர் பிழைத்த மற்றவர்கள் ஆப்பிரிக்கா, பிரிட்டன் என பல்வேறு நாடுகளுக்கு சென்றனர். இதில் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு சென்றவர்களும் உயிரிழந்துவிட்ட நிலையில் போலாந்தில் இருந்தவர்கள் மட்டும் உயிர் பிழைத்திருந்தனர். அப்படி உயிர்பிழைத்தவருக்கு பிறந்த பேரன்தான் ஜான் கிளாஸெவ்ஸ்கி. இவருடைய தந்தை கஷ்டப்பட்டு உழைத்து மீண்டும் குடும்பத்தை ஓரளவு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டார். மகன் ஜான் கிளாஸெவ்ஸ்கி சிறுவனாக இருக்கும்போது அவருடைய தாத்தா தங்கள் புதையல் குறித்து அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.

தங்கம் வெள்ளி
பின்னர் ஒருநாள் ஜான் கிளாஸெவ்ஸ்கி தாத்தாவிடம் புதையல் இருக்கும் இடத்தை வரைந்து கொடுக்கும்படி கேட்டார். தாத்தாவுக்கோ வயது 69, இருப்பினும் தனக்கு ஞாபகத்தில் இருந்த இடத்தை வரைந்து கொடுத்திருக்கிறார். மட்டுமல்லாது அந்த வரைபடத்தில் இரண்டு வரிகளையும் எழுதியுள்ளார். அதாவது "ஜான் கிளாஸெவ்ஸ்கி, நீ எப்படியாவது எனது துப்பாக்கிகளையும், தங்க சிலுவைகளையும் கண்டுபிடித்துவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். இதையே தாரக மந்திரமாக எடுத்துக்கொண்ட ஜான் கிளாஸெவ்ஸ்கி புதையலை தேடி புறப்பட்டிருக்கிறார்.

தாத்தாவின் மேப்
ஆனால் எதிர்பார்த்தது ஒன்ற நடந்தது ஒன்று என்கிற கதையாக தாத்தா கொடுத்த மேம்பில் இருந்த எந்த இடமும் நேரில் இல்லவேயில்லை. ஒரேயோரு மலை மட்டும் அப்படியே மாறாமல் இருந்திருக்கிறது. மற்றபடி அனைத்தும் முற்றிலுமாக மாறியிருக்கிறது. எவ்வளவோ தேடியும் ஜான் கிளாஸெவ்ஸ்கியால் தனது வீடு இருந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பெருங்கடலில் கலந்த பெருங்காயத்தை தேடுவதை போல இருந்துள்ளது. இவருடன் தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட யாருக்கும் புதையல் கிடைக்கவில்லை. எனவே பலரும் இம்முயற்சியை கைவிட்டனர்.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
ஆனால் ஜான் கிளாஸெவ்ஸ்கி மட்டும் முயற்சியை கைவிடாமல் தேடியுள்ளார். இவருடைய விடா முயற்சியை கண்ட 93 வயது உள்ளூர் முதியவர் ஒருவர் உதவ முன்வந்துள்ளார். இப்படியாக ஒரு வழியாக புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதையலில் ஏராளமான வெள்ளி பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தாத்தா சொன்தைப்போல தங்க சிலுவைகளும், துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதையலை கண்டுபிடித்த ஜான் கிளாஸெவ்ஸ்கி அதன் மதிப்பை விட, இதனை கண்டுபிடித்த சந்தோஷம்தான் மனதை நிறைவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications