கட்டிய மனைவியை 2,700 பேருக்கு விருந்தாக்கிய 54 வயது நபர்.. பிரான்ஸில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: பிரான்ஸில் கட்டிய மனைவியை 2,700 பேருடன் கட்டாயப்படுத்தி செக்ஸ் கொள்ள வைத்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த 54 வயது நபரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்தே தனது 46 வயது மனைவியின் விதவிதமான புகைப்படங்களை பல்வேறு வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த அந்த நபர் லட்சக்கணக்கான பவுண்ட் பணத்தை சம்பாதித்து உல்லாசமாக வாழ்ந்து வந்ததாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனது மனைவி கால் கேர்ள், விபச்சாரி என்று இந்த இணையதளங்களில் குறிப்பிட்டுள்ளார் இவர். அதில் பதிவு செய்வோருடன் பேரம் பேசி தனது மனைவியை உறவு கொள்ள வைத்துள்ளார்.

மன ரீதியாக நெருக்கடி:

மன ரீதியாக நெருக்கடி:

இந்த நபர் மீதான வழக்கில் ஆஜராகும் அரசுதரப்பு துணை வழக்கறிஞர் எம்மானுவேல் டுபிக் கூறுகையில், மன ரீதியாக தனது மனைவியை நெருக்கடிக்குள்ளாக்கி இவ்வாறு செய்துள்ளார் இந்த நபர் என்றார்.

தப்பியோட முயன்ற பெண்:

தப்பியோட முயன்ற பெண்:

சிலவேளைகளில் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அந்தப் பெண் தப்பியோட முயன்றவேளைகளில் எல்லாம் அவரை உளவியல் ரீதியாக மூளைச்சலவை செய்து தொடர்ந்து அவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாகவும் எம்மானுவேல் டுபிக் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி மீது நோ வழக்கு:

மனைவி மீது நோ வழக்கு:

2,700 பேருடன் உறவு வைத்துகொண்ட அந்தப் பெண் மீது எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை. அவரது கணவர் மீது மட்டும் மியக்ஸ் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்தகட்ட விசாரணை:

அடுத்தகட்ட விசாரணை:

இந்த நபர் மீது டிசம்பர் மாதம் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளதாகவும் அரசு துணை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+