டோஸ்டருக்குள் 'அது' சிக்கி... தவித்துப் போன ஆண்... தீயணைப்புப் படை வந்து 'மீட்டது'!
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஒரு நபருக்கு வித்தியாசமான சிக்கல் ஏற்பட்டு விட்டது. அதாவது அவரது ஆண்குறி, டோஸ்டருக்குள் சிக்கிக் கொண்டது. கத்திக் கதறித் துடித்த அவரை தீயணைப்புப் படையினர் வந்து போராடி மீட்டனர்.
அந்த நபரின் பெயர் விவரத்தை லண்டன் போலீஸார் வெளியிடவில்லை. ஆனால் அவரது ஆண்குறியை மீட்க கடுமையாக போராடினர் தீயணைப்புப் படையினர் என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம். எப்படி அவரது ஆண்குறி டோஸ்டருக்குள் சிக்கியது என்று தெரியவில்லை.

அடிக்கடி சிக்கினால் எப்படிப்பா...
ஆனால் லண்டனில் இப்படி அடிக்கடி டோஸ்டருக்குள் ஆண்குறிகள் சிக்குவது சகஜமாகி வருகிறதாம். இது லண்டன் போலீஸாரையும், தீயணைப்புப் படையினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏன் இப்படி.. தீவிர விசாரணை
எப்படி இப்படி அடிக்கடி நடக்கிறது என்று அவர்கள் தீவிரமான விசாரணையிலும் இறங்கியுள்ளனர்.

3 ஆண்டுகளில் பல புகார்கள்
கடந்த 3 ஆண்டுளில் இதுபோல பல புகார்கள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளதாம். அவர்களும் போய் பலரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

பிப்டி ஷேட்ஸ் பின் விளைவா...
இதுகுறித்து லண்டன் தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த வீரர் டேவ் பிரவுன் கூறுகையில், இது பிப்டி ஷேட்ஸ் நூலின் பின்விளைவா என்று தெரியவில்லை. ஆனால் பலர் இப்போது டோஸ்டருக்குள் தங்களது ஆண்குறி சிக்கி விட்டதாக எங்களுக்குப் போன் செய்வது அதிகரித்து வருகிறது. உண்மையிலேயே இது கவலை தருகிறது.

கைவிலங்குடன் செக்ஸ்...
மேலும், பலர் கைவிலங்கு போட்டுக் கொண்டு செக்ஸில் ஈடுபட்டு சிக்கித் தவிப்பதும் தொடர் கதையாகியுள்ளது. பெரும்பாலும் பெண்கள் பலர் இதுபோல செய்து மாட்டிக் கொள்கின்றனர்.

பாதுகாப்பா இருந்தா நல்லது
ஆண்களும், பெண்களும் பாதுகாப்பான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்வதே நல்லது. இயற்கையான முறையிலான செக்ஸ் பொசிஷன்களை நாடுவதே நல்லது. மாறாக இதுபோல விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட்டால் சிக்கல்தான் என்றார் அவர்.

நூதனப் பிரச்சினைகள்
இதேபோல லண்டன் தீயணைப்புத் துறையினர் பல்வேறு நூதனமான பிரச்சினைகளை சந்தித்துள்ளனராம்.

டாய்லெட்டுக்குள் தலையை விட்டு
பாத்திரத்துக்குள் தலை மாட்டிக் கொள்வது, டாய்லெட்டுக்களில் தலையை விட்டு மாட்டிக் கொண்ட சம்பவம் அங்கு நடந்துள்ளதாம். இதுதொடர்பாக 18 புகார்கள் வந்ததாம். அதில் சிலர் சிறார்களாம்.

கட்டிங் மெஷினுக்குள் சிக்கிய கைகள்
அதேபோல பேப்பர் கட் செய்யும் ஷ்ரெட்டர் மெஷினுக்குள் கை விட்டுக் கொண்டதாக 5 புகார்கள் வந்தனவாம்.

கைவிலங்கு செக்ஸில் சிக்கிய 79 பேர்
கைவிலங்கிட்டு செக்ஸ் வைத்துக் கொண்டு சிக்கித் தவிப்பதாக 79 புகார்கள் வந்ததாம்.கைவிலங்கிட்டு செக்ஸ் வைத்துக் கொண்டு சிக்கித் தவிப்பதாக 79 புகார்கள் வந்ததாம்.

ஆண்குறியில் மோதிரம்...
ஆண்குறியில் மோதிரம் மாட்டிக் கொண்டு விட்டதாக 9 பேர் தீயணைப்புத்துறையின் உதவியை நாடினார்களாம்.

மிக்ஸிக்குள் மாட்டிய கை
மிக்ஸியில் அரைக்கும்போது கை மாட்டிக் கொண்டதாக 4 சம்பவங்கள் நடந்துள்ளன.

பொம்மைக்குள் சிக்கிய விரல்கள்
பொம்மைகளை வைத்து விளையாடியபோது பொம்மைக்குள் விரல்கள் சிக்கியதாக 17 சிறார்களின் பெற்றோர்கள் தீயணைப்புத் துறையை நாடியுள்ளனர்.

1300 அழைப்புகள்
இதுபோல சிக்கிக் கொண்டதாகவும், மாட்டிக் கொண்டதாகவும் கூறி 2010ம் ஆண்டு முதல் 1300 தொலைபேசி அழைப்புகளை தீயணைப்புத் துறை சந்தித்துள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications