Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளத்தொடர்பில் ஆசிரியை - அதிகாரி.. பாதிக்கப்பட்ட கணவனுக்கு ரூ.37 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

தைபே: பள்ளியில் தன்னுடன் பணியாற்றும் ஊழியருடன் மனைவிக்கு இருக்கும் கள்ளக்காதலை கண்டறிந்த கணவர் கள்ளக்காதலனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனஉளைச்சல் மற்றும் திருமண சட்டத்தை மீறிய உறவு வைத்த குற்றத்துக்காக ரூ.99.7 லட்சம் இழப்பீடு கோரிய நிலையில் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தைவானை சேர்ந்தவர் வேய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் ஜி என்ற பெண்ணுக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர். அதன்பிறகு அவர்களுக்கும் பிரச்சனை வர தொடங்கியது. ஜி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

man-gets-rs-37-lakh-as-a-compensation-from-the-school-officer-who-had-affair-with-is-wife-taiwan-co

இந்நிலையில் தான் ஜி-யின் நடத்தையில் வேய்-க்கு சந்தேகம் வந்தது. அவர் அடிக்கடி செல்போனில் ஒருவருக்கு மெசேஜ் செய்து வருவது தெரியவந்தது. இதனால் தனது மனைவியின் நடத்தையை அவர் கண்காணிக்க தொடங்கினார். அப்போது தான் அதிர்ச்சியான விஷயம் தெரியவந்தது.

2023 நவம்பர் மாதம் செல்போனை எடுத்து பார்த்தபோது யாங்க் என்பவருடன் அவர் கணவன் - மனைவி இடையே நடக்கும் அந்தரங்கள் சார்ந்த விஷயங்களை பேசியிருப்பதும், கணவன் - மனைவி என்று மாறி மாறி அழைத்து கொண்டதும் தெரியவந்தது. அதாவது ஜி பணியாற்றும் பள்ளியில் யாங்க் என்பவர் பணியாற்றி வருகிறார். யாங்க் பள்ளியில் அக்கவுண்ட்டிங் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் ஜி மற்றும் யாங்க் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதும், இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்ததும் கணவர் வேய்க்கு தெரிந்தது.

இதனால் அவர் அதிர்ந்து போனார்.. மேலும் வேய் தனது மனைவியை அபகரித்த கள்ளக்காதலன் யாங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது திருமண வாழ்க்கையை முறித்துவிட்டதாகவும், மனஉளைச்சலை தந்ததாகவும் கூறி யாங்க்கிடம் இருந்து ரூ.99.7 லட்சத்தை நிவாரணமாக வழங்கும்படி கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது வெய்- இந்த வழக்கு தொடர்வதற்கு முன்பாகவே மனஉளைச்சலில் இருந்துள்ளார். அதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவர் பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதேவேளையில் யாங்க் தரப்பில், ஜி-க்கு திருமணம் ஆனது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் இப்படி நடந்து இருக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

மேலும் யாங்கின் வருமானம் வேயின் வருமானத்தை விட கணிசமான அளவில் உயர்வாக உள்ளது. இதனால் வேய்க்கு ரூ.37 லட்சத்தை இழப்பீடாக யாங்க் வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். இந்த வழக்கிற்கு எதிராக யாங்க் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+