இணையத்தில் பிரபலமாக ஆசை.. சீன இளைஞரின் "லபக்".. திரும்பிப் பார்த்த 6 கோடி பேர்!
இணையத்தில் பிரபலம் அடைய விரும்பிய ஒருவர் 20 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் 50 முட்டைகளை குடிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
பீய்ஜிங்: இணையத்தில் பிரபலமாக விரும்பிய சீனாவைச் சேர்ந்த ஒருவர் 20 நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் 50 பச்சை முட்டைகளை முகம் சுளிக்காமல் குடித்துக் காட்டியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த ஒருவரின் வீடியோ பதிவை யுனிலேட் முகநூலில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவை இது வரை 6 கோடி பேர் பார்த்ததுடன், இவர் ஏன் இப்படி செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இணையத்தில் பிரபலமடைய பல வழிகள் இருக்கும் போது இது போன்ற ஆபத்தான முயற்சியை செய்தது ஏன் என்று பலரும் விமர்சிக்கின்றனர்.அப்படி அந்த நபர் என்ன செய்துள்ளார் என கேட்கிறீர்களா.

5 கல்ப்பில் 50 முட்டை
வீடியோவில் தோன்றும் இளைஞர் ஐந்து பீர் மக் முழுவதும் முட்டைகளை உடைத்து ஊற்றியுள்ளார். ஒவ்வொரு மக்கிலும் 10 முட்டை வீதம் சுமார் 5 மக்குகளில் 50 முட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார். ஒரு மக்கை எடுத்து ஒரே கல்பாக பச்சை முட்டையை குடித்தவர், அடுத்தடுத்து 5 மக்குகளை மடக்கு மடக்கென கல்ப்பாக அடித்துள்ளார்.

குமட்டாமல் குடித்து சாதனை
இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள், பச்சையாக ஒரு முட்டையை குடிப்பதே கடினம். ஏனெனில் அதன் பச்சை வாசனை வயிற்றை குமட்டிக் கொண்டு வரும். 5 பீர் மக்குகளில் இருந்த 50 முட்டையையும் மடக் மடக்கென்று குடித்தவர் இறுதியாக வெற்றி குறியும் காட்டுகிறார். சுவாசிப்பதற்கு கூட நேரம் கொடுக்காமல் ஒவ்வொரு மக் முட்டையை முழுங்கியுள்ளார்.
6 கோடி பேர் பார்த்த வீடியோ
இணையதளத்தில் பிரபலமடைவதற்காக வித்தியாசமானவற்றை செய்வதை தனது வழக்கமாக வைத்துள்ளார் இந்த நபர். அவர் நினைத்தது போலவே முட்டைகளை பச்சையாக குடித்து பிரபலமடைந்துள்ளதாகவும் ஏறத்தாழ 6 கோடி பேர் இதனை பார்த்துள்ளதாகவும் டெய்லி மெயில் குறிப்பிட்டுள்ளது.

விமர்சனம்
இது மட்டுமின்றி அவரின் லைவ் ஸ்டீரீம் வீடியோவிற்காக முகநூலில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இணையத்தில் பிரபலமடைய பல வழிகள் இருக்கும் போது இது போன்ற ஆபத்தான முயற்சியை செய்தது ஏன் என்று பலரும் விமர்சிக்கின்றனர். ஏனெனில் பச்சை முட்டையை உண்ணும் போது அதில் பாக்டீரியாக்களின் தாக்கம் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications