சீனாவில் மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை கடித்து குதறிய புலிகள் - அதிர்ச்சி வீடியோ
சீனாவின் பிரபல பூங்கா ஒன்றில் மனைவி மற்றும் குழந்தை கண்முன்னே புலிகள் கணவரை கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ஜிங்: சீனாவில் மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை புலிகள் அடித்துகொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் நிங்போ எனும் நகரத்தில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரை பூங்காவில் இருந்த புலிகள் திடீரென தாக்கி, உள்ளே இழுத்துச்சென்றது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள், உடனடியாக அவரச அலாரத்தை அடித்துள்ளனர். இதற்கிடையில் புலியிடம் மாட்டிக் கொண்ட நபர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மேலே எழுந்த போது புலிகள் உடனடியாக அவரின் கழுத்துப்பகுதியைத் தாக்கி மீண்டும் தரையில் இழுத்து வைத்து கடித்துக் கொண்டிருந்தது.
சம்பவம் அறிந்து அங்கு விரைந்த பூங்கா பாதுகாவலர்கள், பட்டாசுகளை கொழுத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் புலிகளை விரட்ட கடும் முயற்சி செய்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு புலிகளை விரட்டியடித்து அந்த நபரை மீட்டனர்.
ஆனால், அதற்குள் அவரை புலிகள் கடித்துக்குதறிவிட்டன. இதில் பலத்த காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அன்று மாலை பூங்கா மூடப்பட்டது. மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை புலிகள் அடித்துகொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications