கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாட இடையூறாக இருந்த 2 வயது குழந்தையை கொன்ற தந்தை
டெக்சாஸ்: அமெரிக்காவில் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட இடையூறாக இருந்த 2 வயது பெண் குழந்தையை தந்தையே கொலை செய்த கொடுமை நடந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வடுகாவை சேர்ந்தவர் ஆந்தோனி மைக்கேல் சான்டர்ஸ்(31). கடந்த டிசம்பர் மாதம் அவரது மனைவி 2 வயது மகள் எல்லி மற்றும் 5 வயது மகனை மைக்கேலின் பொறுப்பில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார்.
மைக்கேல் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். இந்நிலையில் வெளியே சென்ற அவரது மனைவி வீடு திரும்பியபோது எல்லி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார். உடனே குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் கண்ணில் காயம் இருந்ததுடன், அதன் காதில் ரத்தம் வந்திருந்தது, மேலும் குழந்தையை யாரோ கடித்ததன் தடம் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாட இடையூறாக இருந்ததால் மைக்கேல் குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் கையை வைத்து அழுத்தி கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து மைக்கேல் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications