கால்பந்து போட்டியை ரசிக்க விடாமல் அழுத 5 மாத குழந்தை... அடித்துக் கொன்ற கொடூர ரசிகர்
நியூயார்க்: கால்பந்து போட்டியை ரசிக்க விடாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்த தோழியின் குழந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர்.
அமெரிக்காவின் ஒக்லஹோமாவை சேர்ந்த 22 வயது இளைஞர் டிரிவியான்ஸ் மார்கஸ் வால்கர். தீவிர கால்பந்து ரசிகரான இவர், கடந்த வாரம் தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தான் வெளியே கிளம்புவதாகவும், தான் திரும்பி வரும் வரை தனது 5 மாத குழந்தையை கவனித்துகொள்ளும்படியும் மார்கஸிடம் கோரியுள்ளார் அவரது தோழி. மார்கஸும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
தோழி வெளியேறியதும், மார்கஸ் அங்கிருந்த டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பான கால்பந்து போட்டியை பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது தோழியின் 5 மாத ஆண் குழந்தை அழ ஆரம்பித்துள்ளது. மார்கஸ் எவ்வளவோ சமாதானம் செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லையாம்.
இது கால்பந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்த மார்கஸுக்கு தொந்தரவாக இருந்துள்ளது. இதனால் குழந்தையை அடித்து துன்புறுத்திய மார்கஸ், 2 அடி உயரத்திலிருந்து குழந்தையை கீழே வீசியுள்ளார்.
இதனால் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு, காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இதைக் கண்டு பயந்து போன மார்கஸ் உடனடியாக மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மார்கஸைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications