ஹோட்டலில் மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு டிப்ஸுக்கு பதில் மலைப்பாம்பை விட்டுச் சென்ற நபர்

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் உணவகத்திற்கு சென்று மூக்கு முட்ட சாப்பிட்ட ஒருவர் 13 அடி நீள மலைப்பாம்பை உணவகத்தில் வேண்டும் என்றே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சுஷி உணவகத்திற்கு ஹிரோஷி மோட்டோஹஷி(46) என்பவர் சாப்பிட சென்றுள்ளார். அவர் ரூ.13 ஆயிரத்து 400க்கு சாப்பிட்டுள்ளார். அவர் தன்னுடன் சிறிய பாம்பு ஒன்றை வைத்திருந்ததை பார்த்த பிறர் பயத்தில் அலறினர்.

Man leaves 13-foot Python at restaurant instead of tip

இதையடுத்து உணவக நிர்வாகம் அவரை பாம்பை வெளியே கொண்டு செல்லுமாறு கூற அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் உணவகத்தில் இருந்து கோபமாக கிளம்பிச் சென்றார்.

கிளம்பிச் சென்ற வேகத்தில் 13 அடி நீள மலைப்பாம்புடன் திரும்பி வந்தார். சின்ன பாம்பிற்கு பதில் மலைப்பாம்பை உணவகத்தில் விட்டுச் சென்றார். இது குறித்து உணவக நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹிரோஷியை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் உணவகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹிரோஷி பின்னர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+