இவர் ஒரு பாரீன் ஆண் தேவதை... மனைவியை எப்டி ஐஸ் வைக்கணும்னு இவரப் பாத்து கத்துக்கோங்கப்பா!
கனடாவில் காதலிக்கு வித்தியாசமான பரிசு கொடுத்து உலகளவில் பிரபலமாகி விட்டார் காதலர் ஒருவர்.
ஒட்டாவா: கனடா நாட்டில் ஒருவர் தனது காதலிக்கு வைர மோதிரத்தில் கேரட்டை வளர்த்து காதல் பரிசாக கொடுத்து அசர வைத்துள்ளார்.
கனடாவை சேர்ந்தவர்கள் ஜான் நிவெல்லி மற்றும் டீஜே ஸ்குரிஸ். கடந்த அறு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள். மேலும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள்.

ஜான் நிவெல்லி மற்றும் டீஜே ஸ்குரிஸ்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கனடாவில் உள்ள ஒரு மருத்துவமனை ஆய்வகத்தில் ஸ்குரிஸ் வேலை செய்து வருகிறார். ஆண் தேவதை ஸ்டைலில் நிவெல்லி வீட்டில் இருந்த படி குழந்தைகளை பார்த்துக்கொள்கிறார்.
நிவெல்லி தனது வீட்டில் தோட்டம் அமைத்து நிறைய தாவரங்களை வளர்த்து வருகிறார். அது அவரது மிகப்பெரிய பொழுது போக்கு. மேலும் குழந்தைகளையும், காதலியையும் மிக அன்பாக பார்த்துக் கொள்வார் நிவெல்லி.
இந்நிலையில் காதலியை மனைவியாக்க வேண்டும் எனும் ஆசை நிவெல்லிக்கு வந்தது. இதையடுத்து ஏற்கனவே வாங்கி வைத்திருந்த வைர மோதிரத்தை ஸ்குரிசிடம் கொடுத்து திருமணத்திற்கு புரொபோஸ் செய்ய நிவெல்லி முடிவு செய்தார். ஆனால் அவர் அதனை அப்படியே கொடுக்கவில்லை.
வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நிவெல்லி, அந்த மோதிரத்தில் ஒரு கேரட்டை வளர்த்து ஸ்குரிஸ்க்கு பரிசளிக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் மோதிரத்தை மண்ணில் புதைத்து, கேரட் விதைகளை தூவி வளர்க்க ஆரம்பித்தார்.
சரியாக 90 நாட்கள் கழித்து காதலி மற்றும் மகனை அழைத்து அந்த கேரட்டை அறுவடை செய்ய சொன்னார். வைர மோதிரத்துடன் கேரட் வளர்ந்திருப்பதை பார்த்து ஸ்குரிஸ் ஆச்சரியமடைந்தார். அந்த நேரத்தில் நிவெல்லி சினிமா ஹீரோ போல் தரையில் மண்டியிட்டு ஸ்குரிசிடம் புரொபோஸ் செய்தார். ஸ்குரிஸ்க்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
காதலரின் புரொபோசல் குறித்து ஸ்குரிஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டார். இது வைரலானதை தொடர்ந்து நிவெல்லி உலக பேமஸ் ஆகிவிட்டார். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications