ஐயா... ஐபோன்-6 வாங்க காசு இல்லய்யா... என் காதலியை யாராவது வாடகைக்கு வாங்குங்கய்யா!
ஷாங்காய்: புதிதாக அறிமுகமாகியுள்ள ஐபோன்-6 வாங்க பணம் திரட்டுவதற்காக தனது காதலியை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளார் சீன கல்லூரி மாணவன் ஒருவர்.
சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் தனது காதலியான ஜியாவோ அய்-யை வாடகைக்கு விடப்போவதாக அறிவித்து, அது பற்றிய வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, தான், கல்வி பயிலும் சோன்ங்ஜியாங் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்டரில் காதலியின் போட்டோவை ஒட்டி, அவரது உயரம் 170, எடை 48 கிலோ என்பது போன்ற விவரங்களை வாலிபர் எழுதியுள்ளார். காதலியுடன் நேரத்தை செலிவிட விரும்புவோருக்கு கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளார் அந்த வாலிபர். அதன்படி, ஒரு மணி நேரம் செலவிட 1 பவுண்ட்டும், நாள் முழுக்க செலவிட 5 பவுண்ட்டும், ஒரு மாதத்தை செலவிட 50 பவுண்ட்டும் வாடகையாக நிர்ணயித்துள்ளார்.
வாடகைக்கு கேட்கும் நபர்கள் தனது காதலியோடு சாப்பிடலாம், விளையாடலாம், படிக்கலாம், டேட்டிங் செல்லலாம். ஆனால், காதலியிடம் தவறாக நடந்து கொள்ள அனுமதி கிடையாது என்று நிபந்தனை விதித்துள்ளார். சீன நாட்டு சமூக ஊடகங்களில் இந்த வாலிபர் குறித்துதான் பேச்சாக உள்ளது.
சமூக வலைத்தளத்தில் கருத்து கூறும் சிலர், இது ஆப்பிள் நிறுவனத்தின் விளம்பர ஸ்டன்ட் என்று கூறியுள்ளனர். சிலர், ஆப்பிள் போனை வாங்கப்போவோர் ஏழையாகவோ, முட்டாள்களாகவோதான் இருப்பார்கள், சில நேரங்களில் இரண்டுமாகவும் இருப்பார்கள் என்பதற்கு இந்த நபர் ஒரு உதாரணம் என்பது போன்ற கமெண்ட்டுகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ள ஐபோன்-6, அடுத்த மாதம் இந்தியாவிலும், இந்தாண்டு இறுதியில் சீனாவிலும் சந்தைப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
