"இந்த" நேரத்துலயும் அவன் பெயரையா சொல்ற.. காதலியின் குடலை உறுவிய வாலிபர்!

Subscribe to Oneindia Tamil

புளோரிடா: அமெரிக்காவில் உறவு கொள்கையில் தனது முன்னாள் கணவரின் பெயரை கூறிய காதலியின் குடலை உருவி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிடல் லோபஸ்(24). அவரது காதலி மரியா நெமத்(31). அவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு போதையில் உறவு கொண்டுள்ளனர். அப்போது மரியா ஒரு முறை அல்ல இரண்டு முறை தனது முன்னாள் கணவரின் பெயரை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த லோபஸ் எழுந்து வீட்டின் கண்ணாடிக் கதவை உடைத்தார். பின்னர் அவர் மரியாவை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். அதன் பிறகு லோபஸ் மரியாவின் உடலுக்குள்(மர்ம உறுப்பு மூலம்) பல பொருட்களை திணித்தார்.

அப்படியும் ஆத்திரம் தீராத அவர் தனது கைகளால் மரியாவின் குடலை உருவினார். மரியாவின் உடலை குளியலறைக்கு இழுத்துச் சென்று முகத்தில் தண்ணீர் தெளித்தார். அப்படியும் அவர் எழாததால் 911 எண்ணுக்கு போன் செய்து தனது காதலி மூச்சுவிடாமல் இருப்பதாக தெரிவித்தார்.

போலீசார் அங்கு வந்தபோது லோபஸ் நிர்வாணமாக கிடந்த மரியாவின் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மரியா இறந்துவிட்டது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லோபஸை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

விசாரணையின்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். லோபஸ் ப்ரோவர்ட் கவுன்ட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+