அடடா.. 'அதுக்கு' பயந்து தன் வீட்டை தானே கொளுத்திய இளைஞர்.. எங்க தெரியுமா?
சிலந்தியை கொல்ல தன் வீட்டையே இளைஞர் கொளுத்தி விட்டார்.
கலிபோர்னியா: மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதா என்று நாம ஒரு பேச்சுக்குதான் சொல்வோம். இப்படித்தான் ஒருத்தர் தான் வீட்டை தானே கொளுத்திக்கிட்டார்.. ஆனா மூட்டை பூச்சிக்காக இல்லை!! எங்கே தெரியுமா? எல்லாம் வினோதத்துக்கு பெயர்போன அமெரிக்காவில்தான்!!
கலிபோர்னியாவில் ப்ரெஸ்னோ என்கிற பகுதி உள்ளது. இதன் அருகே லேக் வ்யூ பாயிண்ட் என்ற அழகான இடம் உள்ளது. இந்த இடத்துக்கு பக்கத்துலேயே ஒரு 23 வயது உடைய இளைஞர் hut எனப்படும் ஒரு குட்டி குடில் மாதிரி ரெடி பண்ணிக்கிட்டிருந்தார். தன் அம்மா, அப்பாவுக்காக ஆசை ஆசையாக கொடுப்பதற்காக இந்த பாசக்கார பிள்ளை தயார் செய்யும் குடில் அது.

விடோ சிலந்தி
பின்னர், தானே உருவாக்கிய அந்த குடிலுக்கு உள்ளே சென்று பார்த்தால், அங்கே என்னவோ கறுப்பு கறுப்பாக தெரிந்தது. கிட்டே சென்று உற்று பார்த்தார். அப்போதான் தெரிந்தது அது எல்லாம் சிலந்திகள் என்று. விடோ என்ற வகையை சேர்ந்த இந்த சிலந்திகள் கறுப்பாகத்தான் இருக்குமாம். அவைகளை கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர் உடனே விரட்ட தொடங்கினார். சிலந்திகள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

பொசுக்கிட நினைத்தார்
இளைஞர் ஒத்த ஆளாய் சிலந்திகளை விரட்ட என்னென்னவோ செய்து பார்த்தார். அந்த சிலந்திகள் எதற்கும் அசையவில்லை. கடைசியில் வேற வழி தெரியாத இளைஞர் தீப்பந்தம் ஒன்றை தயார் செய்தார். அதை கொண்டுபோய் சிலந்திகள் மேல் வைத்து எரித்து பொசுக்கிவிடலாம் என்று நினைத்து எடுத்து சென்றார். ஆனால் சிலந்தி மேல் பட நெருப்பு வீட்டிற்குள் இருந்த மற்ற பொருட்களின் மேல் பட்டுவிட்டதால் தீ 'கபக்'கென பத்திக் கொண்டது.

பிரச்சாரத்தில் போலீசார்
அம்மா, அப்பாவுக்காக ஆசையாக வாங்கி வைத்திருந்த பொருட்கள் உட்பட வீட்டுக்குள் இருந்த எல்லா பொருட்களும் பற்றிக் கொண்டு கப கபவென எரிந்தன. இப்படி வீடு தீப்பற்றி எரியும் சம்பவம் தீயணைப்பு துறையினருக்கு அளிக்கப்பட்டது. இதனால் 2 தீயணைப்பு வண்டிகளில் 15 பேர் விரைந்து வந்து தீயை அணைத்தார்கள். இந்த பரபரப்பு சம்பவத்தை அடுத்து, போலீசார் பொது மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளார்கள்.

10 ஆயிரம் டாலர் நஷ்டம்
"கலிபோர்னியா காட்டு பகுதிகளிலிருந்து இப்படிப்பட்டவிஷ பூச்சிகள் வரத்தான் செய்யும். அதற்காக நீங்களாகவே எந்த முடிவும் எடுத்து செய்திட வேண்டாம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கூப்பிடுங்கள், இப்படி பூச்சிகளை கொல்ல யாரும் நெருப்பை பயன்படுத்த வேண்டாம் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். வீட்டிலிருந்த சிலந்திகளைக் கொல்ல வீட்டையும் சேர்ந்து கொளுத்திய அந்த இளைஞர் யார் என்று போலீசாரை கேட்டால் விவரம் சொல்ல மறுத்துவிட்டனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் டாலர் புத்திசாலி இளைஞருக்கு நஷ்டமானதுதான் மிச்சம்!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications