யு.எஸ்.: துப்பாக்கியை சுத்தம் செய்கையில் குண்டு வெடித்து 7 மாத குழந்தை பலி: வாலிபர் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் 18 வயது வாலிபர் ஒருவர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்கையில் குண்டு வெடித்ததில் அவரின் காதலியின் 7 மாத ஆண் குழந்தை பலியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ரோம் நகரில் வசித்து வருபவர் ஹென்றி பார்டில்(18). அவரது காதலி செலினா ஹிட்(19). செலினாவின் மகன் 7 மாத குழந்தையான நதானியல் ஹிட். செலினா கடந்த ஜூன் மாதம் தான் ஹென்றியின் வீட்டில் குடியேறி அவருடன் லிவ் இன் முறைப்படி வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஹென்றி கடந்த சனிக்கிழமை வீட்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்துள்ளார். அப்போது தவறுதலாக குண்டு வெடித்து நதானியல் பலியானார். சம்பவம் நடந்தபோது வீட்டில் செலினா மற்றும் குடும்ப நண்பர் ஒருவரும் இருந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹென்றியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நதானியல் பற்றி செலினாவின் தந்தை கேரி முன்ட்ஸ் கூறுகையில்,

என் மகள் கடந்த ஜூன் மாதம் எங்கள் வீட்டில் இருந்து வெளியேறி ஹென்றியின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதில் இருந்து நான் அவரை சந்திப்பதும் இல்லை, பேசுவதும் இல்லை. என் பேரனையும் நான் ஜூன் மாதம் பார்த்தது தான். அவன் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும் மகிழ்ச்சியான குழந்தை.
என் மகளை நான் நேசிக்கிறேன். இந்த சம்பவத்தை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications